TN govt issued Order establishing Hindu Religious and Charitable Endowments Dept as a separate department AI generated
தமிழ்நாடு

”தனித் துறையானது இந்து சமய அறநிலையத்துறை” : தவெக அரசு நடவடிக்கை : அரசாணை வெளியீடு..!

தமிழகத்​தில் கோயில் நிர்​வாகத்தை மேம்​படுத்​தும் வகை​யில், இந்து சமய அறநிலை​யத் துறையை தனித் துறை​யாக உரு​வாக்கி தமிழக அரசு அரசாணை வெளி​யிட்​டுள்​ளது.

Kannan

இந்து சமய அறநிலையத்துறை

Hindu Religious and Charitable Endowments Department : தமிழ்நாட்டில் இந்து சமய திருக்கோயில்களின் வளர்ச்சிக்காகத் தனித்துறையாக இந்து சமய அறநிலையத்துறை தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்old. 1960ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் இது செயல்பட்டு வருகிறது.

11 மண்டலங்களாக செயல்படுகிறது

இத்துறைக்கு, மாநில அளவில் ஒரு செயலகம் தலைமைச் செயலகத்தில் உள்ளது. மேலும் தமிழகத்தில் கோவில்களில் பராமரிப்பு, நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள வசதியாக...

இந்து சமய அறநிலையத்துறை சேலம், கோவை, திருநெல்வேலி, மதுரை, சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, மயிலாடுதுறை, பழனி என, 11 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

கோவில்கள் நிர்வகிப்பு

அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் நிர்வகத்துடன் அரசின் யானைகள் புத்துணர்வு முகாம், அன்னதானத் திட்டம் போன்ற பணிகளையும் இத்துறை செய்து வருகிறது.

கூட்டுத்துறையின் கீழ் செயல்பாடு

கடந்த திமுக ஆட்​சி​யில் இத்​துறை, ‘சுற்​றுலா, பண்​பாடு மற்​றும் அறநிலை​யங்​கள் துறை’ என்ற கூட்​டுத் துறை​யின்​கீழ் ஒரு பிரி​வாக செயல்​பட்டு வந்​தது.

புதிய ஆட்சி அமைந்​ததும், வணி​கவரி மற்​றும் பதிவுத்​துறை​யின் கீழ் அறநிலை​யத்​துறை இணைக்​கப்​பட்​டது.

தனித்துறையான இந்து சமய அறநிலையத்துறை

இந்​நிலை​யில், நிர்​வாக வசதிக்​காக​வும், பணி​களை துரிதப்​படுத்​த​வும், இது தனித் துறை​யாக மாற்​றப்​பட்​டுள்​ளது. இதற்​கான அரசாணையை தமிழக தலை​மைச் செயலர் எம். சாய் குமார் வெளி​யிட்​டுள்​ளார்.

ராஜராமனிடம் கூடுதல் பொறுப்பு

தமிழ் வளர்ச்சி மற்​றும் செய்​தித் துறைச் செயல​ராக உள்ள வி. ராஜா​ராமனிடம் கூடு​தல் பொறுப்​பாக அறநிலை​யத்​துறை வழங்​கப்​பட்​டுள்​ளது.

இந்த புதிய துறை உரு​வாக்​கத்​துக்கு ஏற்ப, ‘தமிழ்​நாடு அரசு வணிக விதி​கள் 1978’-ல் உரிய மாற்​றங்​கள் விரை​வில் செய்​யப்பட உள்​ளன. இதற்​கான நடவடிக்​கைகளை மனிதவள மேலாண்​மைத் துறை மேற்​கொள்​ளும் என அரசாணை​யில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

கோவில் பணிகளை விரைந்து மேற்கொள்ளலாம்

அரசின் நிர்வாக வசதிக்காகவும், கோயில் தொடர்பான பணிகளை விரைந்து செயல்படுத்தவும் புதிய தனித்துறை உருவாக்கப்பட்டுள்ளது.

இதுவரை தனித்து இயங்கி வந்த அறநிலையத்துறை ஆணையரகம், இனி புதிய துறையின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

==========