TNPSC Group 2 Exam Notification 2025 Check Date in Tamil 
தமிழ்நாடு

TNPSC Group 2 Exam : டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு தேதி அறிவிப்பு

TNPSC Group 2 Exam Notification 2025 : தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

MTM

யுபிஐயில் தேர்வுக் கட்டணம்

TNPSC Group 2 Notification 2025 : சார்-பதிவாளர், உதவி தொழிலாளர் ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் 645 காலியிடங்களை நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த குரூப்-2(Group 2) மற்றும் குரூப் 2(ஏ) தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. குரூப் 2 (ஏ)-வுக்கான தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி செய்திக் குறிப்பு :

இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு: ‘டிஎன்பிஎஸ்சி(TNPSC) ஆண்டு தேர்வு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, சார்-பதிவாளர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், வனவர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், உதவியாளர் உள்பட பல்வேறு பதவிகளில் 645 காலியிடங்களை நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2(ஏ) தேர்வுக்கான அறிவிப்பு ஜூலை 15-ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கான முதல்நிலைத் தேர்வு(TNPSC Group 2 Date) செப்டம்பர் 28-ம் தேதி நடைபெறும். தேர்வுக்கு ஆகஸ்ட் 13-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

யுபிஐயில் தேர்வுக் கட்டணம் :

தேர்வுக் கட்டணத்தை யுபிஐ வசதி மூலமாக செலுத்தலாம். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை தோராயமானது ஆகும். அரசுத் துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களிடம் இருந்து கூடுதல் காலிப் பணியிடங்கள் பெறப்படு்ம பட்சத்தில் கலந்தாய்வுக்கு முன்பாக மேலும் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

மேலும், தேர்வர்களின் நலன் கருதி குரூப்-2 (ஏ) முதன்மைத் தேர்வு முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதன்மைத்தேர்வானது குரூப்-2 பணிகளுக்கும், குரூப்-2(ஏ) பணிகளுக்கும் தனித்தனியே நடத்தப்படும். குரூப்-2 பணிகளுக்கான முதன்மைத் தேர்வில், பொது அறிவு பகுதியில் 300 மதிப்பெண்களுக்கு விரிவாக விடையளிக்க வேண்டும். குரூப்-2 (ஏ) பணிகளுக்கு பொது அறிவு பகுதியில் 150 கேள்விகள், கணிதம் பகுதியில் 50 கேள்விகள் என அப்ஜெக்டிவ் முறையில் 200 கேள்விகள் இடம்பெறும். மொத்த மதிப்பெண் 300. இது கணினி வழியில் நடத்தப்படும்.

முன்பு பொது அறிவு பகுதியில் பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் தொடர்பான 60 வினாக்கள் இடம்பெற்றிருந்தது. தற்போது புதிய தேர்வுமுறையில் மொழிப் பாடம் தொடர்பான அந்த பகுதி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. மேலும், விரிவாக பதில் எழுதக்கூடிய கட்டாய தமிழ் மொழித் தகுதித்தாள் தேர்வு குரூப்-2, குரூப் 2-(ஏ) இரு முதன்மைத் தேர்விலும் பொது தேர்வாக இடம்பெறும். இதில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் பெற வேண்டும். இந்த தேர்வில் எடுக்கும் மதிப்பெண் ரேங்க் பட்டியல் தயாரிக்க எடுத்துக்கொள்ளப்படாது.

இந்த நிலையில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மிகக்குறைவாக இருப்பதாக தேர்வுக்குத் தயாராகும் தேர்வர்கள் தெரிவித்துள்ளனர்.