பொங்கல் திருவிழா கொண்டாட்டம்
TN Pongal Gift 2026 Amount : ஆண்டுதோறும்,தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் உட்பட பலரும் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை தொடர்ந்து, மக்களால் பெரிதும் போற்றப்பட்டு விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகையில் பொங்கல் உரித்தான ஒன்றாகும்.
அதன்படி, இந்த ஆண்டு கொண்டாடப்பட்ட பொங்கல் திருவிழா, கடந்த திருவிழாக்களை விட அனைத்து ஊர்களிலும், நகரங்களிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதைத்தொடர்ந்து இரண்டாம் நாளாக பொங்கலுக்கென என்று பெயர்போன ஜல்லிக்கட்டு திருவிழா, தென்மாவட்டங்களான அவனியாபுரம், பாலமேடு என பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு வீரர்கள் புடைசூழ கொண்டாடப்பட்டது.
தமிழக அரசின் பொங்கல் பரிசு
இந்நிலையில், ஒவ்வொரு பொங்கல் பண்டிகைக்கும் தமிழக அரசு ரேஷன் அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு என அரிசி, மஞ்சள், சர்க்கரை உட்பட ரொக்கத்தொகையுடன் பரிசு பொருட்களை கொடுக்கும். அதன்படி, இந்த ஆண்டும் நிர்ணயித்தபடி, ரேஷன் அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசாக தலா, 3,000 ரூபாய் ரொக்கத்தை, தமிழக அரசு வழங்கியது.
இந்த பணம் ஒருவருக்கு, 500 ரூபாய் நோட்டு வீதம், ஆறு நோட்டுகளாக வழங்கப்பட்டன. அதன்படி, 2.15 கோடி கார்டுதாரர்களுக்கு, 6,453 கோடி ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளாக வழங்கப்பட்டு உள்ளன. தற்போது பலரும், 500 ரூபாய் நோட்டை தங்கள் ஊர்களில் உள்ள கடைகளில் வழங்கி, பொருட்களை வாங்குகின்றனர்.
சில்லரை தட்டுப்பாடு குறித்து வணிகர்கள்
ஒரே சமயத்தில் பலரும், 500 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதால், அதற்கு சில்லரை வழங்க முடியாமல், வணிகர்கள் திணறி வருகின்றனர். இருக்கும் சில்லரைகளை முடிந்தவரை பொதுமக்களுக்கு மாற்றி வழங்கி வருவதாக தெரிவிக்கும் அவர்கள், அதிகப்படியான 500 ரூபாய் புழக்கத்தால், தொடர்ந்து அவதியடைவதாகவும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வணிகர்கள் தரப்பில் ஒரு மளிகை கடையில் தினமும் சராசரியாக, 5,000 - 10,000 ரூபாய் வியாபாரம் நடக்கும். மொத்தம், 100 பேர் கடைக்கு வந்தால், 20 பேர் 500 ரூபாய் நோட்டுகள் தருவர். மற்றவர்கள், 20 ரூபாய், 50 ரூபாய், 100 ரூபாய், 200 ரூபாய் வழங்குவர். இதனால், சில்லரை தட்டுப்பாடு ஏற்படாது.
ஆனால்,தற்போதைய சூழலில் தற்போது கடைக்கு வருவோரில், 90 - 95 சதவீதம் பேர், 500 ரூபாய் நோட்டுகளை தான் தருகின்றனர். இதனால், சிலருக்கு தான் சில்லரை தர முடிகிறது; மற்றவர்களுக்கு தர முடிவதில்லை. ஆட்டோ, ஷேர் ஆட்டோ ஓட்டுபவர்களும் தங்கள் வண்டியில் பயணம் செய்தவர்கள் வழங்கும், 500 ரூபாய் நோட்டை கடையில் தந்து, சில்லரை கேட்கின்றனர். சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொங்கல் பரிசில், 3,000 ரூபாய் வழங் கியதால், 500 ரூபாய் நோட்டு புழக்கம் அதிகரித்துள்ளதால் தான் இந்த சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என வணிகர்கள் தரப்பில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.