List of public holidays for 2026 released By Tamil Nadu Government Google
தமிழ்நாடு

வெளியானது 2026ம் ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியல் : தமிழக அரசு!

TN Holiday: தமிழ்நாடு அரசு 2026-ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்காக மொத்தம் 24 நாட்கள் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Bala Murugan

பொதுவிடுமுறை குறிப்பு

Tamil Nadu Public Holidays List 2026 in Tamil : பொதுவாக ஒரு ஆண்டுக்கு 20 முதல் 25 நாட்கள் அரசு விடுமுறை எனப்படும் பொதுவிடுமுறை இருக்கும். அந்த விடுமுறைகள் குறிப்பிட்ட அரசு ஊழியர்கள், நிர்வாகிகள் என சிலருக்கு மட்டுமே கிடைக்கும். சில அலுவலகங்கள், பள்ளிகள் என அரசு அங்கீகாரம் பெற்ற இடங்களில் சிலவற்றில் விடுமுறை இருக்கும்.

சிலவற்றில் நிர்வாக அடிப்படையின்படி அது தவிர்க்கப்படும், இந்நிலையில், தமிழக அரசு ஆண்டுதோறும் வரும் ஆண்டிற்கான பொதுவிடுமுறைகளை அறிவிக்கும். அதன்படி, அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் இயக்கப்பட்டு, விடுமுறை நாட்கள் அறிவிக்கப்படும்.

2026 ஆம் ஆண்டு பொதுவிடுமுறை

அதன்படி, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான 2026-ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களின் பட்டியலை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் டிசம்பர் 25-ஆம் தேதி வரை மொத்தம் 24 நாட்கள் பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே விடுமுறை

இந்த விடுமுறை நாட்கள் அரசுத் துறைகள், அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும். மேலும், ஏப்ரல் 1 (வங்கிகளின் ஆண்டுக் கணக்கு முடிப்பு) உள்ளிட்ட சில தினங்கள் வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே விடுமுறையாக இருக்கும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2026-ஆம் ஆண்டுக்கான முக்கிய பொது விடுமுறைகள் விவரத்தில்

ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் தினம், தைப்பூசம், குடியரசு தினம், தெலுங்கு வருடப் பிறப்பு, மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி, தமிழப் புத்தாண்டு, ரம்ஜான், மே தினம், பக்ரீத், மொகரம், சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, மிலாது நபி, காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜய தசமி, தீபாவளி, கிறிஸ்துமஸ் ஆகிய பொது விடுமுறை தினங்கள் வருகிற 2026 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளன.

மாத வாரியான விடுமுறைகள்

இதைத்தொடர்ந்து மாத வாரியாக கணக்கிடும்பொழுது, அதிகபட்சமாக ஜனவரி மாதத்தில் 5 நாட்கள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளன. மார்ச், ஏப்ரல் மற்றும் அக்டோபர் ஆகிய மாதங்களில் தலா 3 நாட்கள் பொது விடுமுறை வருகிறது. ஏப்ரல் 1-ஆம் தேதி (வங்கிகளின் ஆண்டுக் கணக்கு முடிவு) வணிகம் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டும் பொது விடுமுறையாகும். தைப்பூசம் மற்றும் முக்கியப் பண்டிகையான தீபாவளி பண்டிகை இரண்டும் 2026-ஆம் ஆண்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் வருவது என்பது குறிப்பிடத்தக்கது.