TN Special Bus Service Diwali 2026 Details source: google
தமிழ்நாடு

தீபாவளிப் பண்டிகை: நாளை முதல் 15,659 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்; அமைச்சர் தமிழன் பார்த்திபன் அறிவிப்பு!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 5 முதல் 3 நாட்களுக்கு சென்னையிலிருந்து 15,659 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக அமைச்சர் தமிழன் பார்த்திபன் அறிவிப்பு.

Kavitha prasanna

TN Special Bus Service Diwali 2026 Details

சிறப்புப் பேருந்துகள் இயக்கம் குறித்த அறிவிப்பு

தீபாவளித் திருநாளைக் கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்களுக்காக நாளைமுதல் (05-11-2026) மூன்று நாட்களுக்கு 15,659 பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

சிறப்பு ரயில்கள் அனைத்தும் நிரம்பி விட்டதால், அரசு பேருந்துகளை நம்பியுள்ள பயணிகள் சிரமமின்றிப் பயணம் செய்ய இந்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னையிலிருந்து இயக்கப்படும் பேருந்துகளின் அட்டவணை

நவம்பர் 5 முதல் 7 வரை 3 நாட்களுக்கு வழக்கம் போல இயக்கப்படும் 6,573 பேருந்துகளுடன், கூடுதலாக சிறப்பு மற்றும் ஒப்பந்தப் பேருந்துகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 15,659 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

  1. நவம்பர் 5 தேதி 2,191 வழக்கமான பேருந்துகள், 2,316 சிறப்புப் பேருந்துகள், 554 தனியார் ஒப்பந்தப் பேருந்துகள் (மொத்தம் 5,061).

  2. நவம்பர் 6 தேதி 2,191 வழக்கமான பேருந்துகள், 2,632 சிறப்புப் பேருந்துகள், 608 தனியார் ஒப்பந்தப் பேருந்துகள் (மொத்தம் 5,431).

  3. நவம்பர் 7 தேதி 2,191 வழக்கமான பேருந்துகள், 2,479 சிறப்புப் பேருந்துகள், 497 தனியார் ஒப்பந்தப் பேருந்துகள் (மொத்தம் 5,167).

சென்னை தவிர்ந்த இதர மாவட்டங்கள் இடையே செல்லும் பயணிகளுக்காக 3 நாட்களுக்கும் சேர்த்து மொத்தம் 26,139 பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.

பேருந்துகள் புறப்படும் முக்கிய இடங்கள்

சென்னை மாநகரப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் பயணீகள் எளிதாக பயணிக்க வேண்டும் என்றும் ஐந்து முக்கிய இடங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

  1. கோயம்பேடு

  2. மாதவரம்

  3. மறைமலைநகர்

  4. கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம்

  5. சி.எம்.டி.ஏ காலநிலை பூங்கா

டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு செல்வதற்கு ஏதுவாக, சென்னையின் 16 முக்கிய இடங்களில் இருந்து இணைப்புப் பேருந்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

பயணிகள் கவனத்திற்கு மற்றும் அதிக கட்டண எச்சரிக்கை

தீபாவளி சிறப்புப் பேருந்துகளில் பயணிக்க இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் முன்-பதிவு செய்துள்ளனர்.

மேலும் முன்பதிவு செய்யப்பட்ட பேருந்துகள் எந்தெந்தப் பேருந்து முனையங்களில் இருந்து புறப்படும் என்பதை அதிகாரப்பூர்வச் செயலி மூலம் பயணிகள் நேரடியாக அறிந்துகொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

பண்டிகைக் காலத்தைப் பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் அவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் எச்சரித்துள்ளார்.

===========