TNEA 2026: Engineering admission rank list to be released tomorrow! Counseling dates also to be announced! google
தமிழ்நாடு

TNEA 2026: பொறியியல் சேர்க்கை தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு! : கலந்தாய்வு தேதிகளும் அறிவிப்பு!

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை தரவரிசை பட்டியலை நாளை வெளியிடுகிறார் உயர்கல்வித் துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன். கலந்தாய்வு விவரங்கள் மற்றும் முக்கிய தேதிகள் விவரம்!

Kavitha prasanna

TNEA 2026: Engineering admission rank list to be released tomorrow! Counseling dates also to be announced!

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டிற்கான இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதன் முக்கிய கட்டமாக, பொறியியல் சேர்க்கைக்கான அதிகாரப்பூர்வ தரவரிசை பட்டியலை உயர்கல்வித் துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் நாளை (ஜூலை 1) வெளியிடுகிறார்.

தாமதத்திற்கான காரணம்

சிபிஎஸ்சி பிளஸ் 2 வகுப்புகளுக்கான மறுமதிப்பீட்டு முடிவுகளை ஜூன் 21 அன்று தாமதமாக வெளியிட்டது. இதன் காரணமாக, முன்னதாகவே வெளியிடப்பட வேண்டிய தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் தள்ளிப்போய், தற்போது நாளை வெளியாக உள்ளது.

தரவரிசை பட்டியலுடன் சேர்த்து, மாணவர்களுக்கான பொறியியல் கலந்தாய்வு தேதிகளும் நாளை அறிவிக்கப்பட உள்ளன.

குறைதீர்ப்பு கால அவகாசம்

நாளை வெளியாகும் தரவரிசைப் பட்டியலில் ஏதேனும் பிழைகள் அல்லது குறைகள் இருக்கும் பட்சத்தில், அவற்றை சரிசெய்வதற்கான குறைதீர்ப்பு கால அவகாசம் ஜூலை 1 முதல் ஜூலை 5-ஆம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தங்களுக்கு அருகிலுள்ள தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை சேவை மையங்களை அணுகி இதற்கான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பப் பதிவு புள்ளிவிவரங்கள்

  • நடப்பு கல்வி ஆண்டுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த மே 3-ஆம் தேதி தொடங்கி ஜூன் 5-ஆம் தேதி வரை நடைபெற்றது.

  • இதில் ஒட்டுமொத்தமாக 3.02 லட்சம் மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.

  • விண்ணப்பித்தவர்களில் 2,43,575 பேர் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஆவர்.

  • வெளிமாநிலங்கள் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் 1,645 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

  • இதில் 103 பேர் இலங்கைத் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

====