TNEA Registration Last Date source: ai generated
தமிழ்நாடு

TNEA Registration Last Date|பொறியியல் சேர்க்கை 2026: ஆன்லைன் விண்ணப்பப் பதிவுக்கு நாளை கடைசி நாள்!

தமிழக இன்ஜினியரிங் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நாளை செவ்வாய்க்கிழமையுடன் முடிகிறது. முழுமையான கால அட்டவணை மற்றும் புள்ளிவிவரங்கள் இதோ.

Kavitha prasanna

TNEA Registration Last Date | Engineering Admissions 2026: Tomorrow is the last day for online application registration!

பொறியியல் படிப்பு கலந்தாய்வு

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் கலந்தாய்வு விண்ணப்பப் பதிவு கடந்த மே மாதம் 3-ஆம் தேதி தொடங்கியது.

ஆன்லைன் விண்ணப்பப் பதிவு

விண்ணப்பப் பதிவு தொடங்கிய நாள் முதலே மாணவ-மாணவிகள் மிகத் தீவிரமாக விண்ணப்பங்களை பதிவு செய்து வருகின்றனர். நாள்தோறும் சராசரியாக 5,000 முதல் அதிகபட்சமாக 20,000 பேர் வரை போட்டி போட்டுக்கொண்டு ஆன்லைனில் விண்ணப்பித்து உள்லனர்.

விண்ணப்பக் கட்டணம் செலுத்திய மாணவர்களின் எண்ணிக்கை

இதில் நேற்று (மே.31 ) மாலை வரையிலான அதிகாரப்பூர்வ நிலவரப்படி, மொத்தம் 2 லட்சத்து 81 ஆயிரத்து 502 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதில் 2 லட்சத்து 17 ஆயிரத்து 627 பேர் தங்களுக்கான விண்ணப்பக் கட்டணங்களை செலுத்தியுள்ளனர்.

சான்றிதழ் பதிவேற்றம்

மேலும், கட்டணம் செலுத்தியவர்களில் 1 லட்சத்து 84 ஆயிரத்து 53 பேர் தங்களின் கல்விச் சான்றிதழ்களை வெற்றிகரமாக இணையதளத்தில் பதிவேற்றமும் செய்துள்ளனர்.

விண்ணப்பப் பதிவு கால அவகாசம் நாளை நிறைவு

பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளை (செவ்வாய்க்கிழமை) நிறைவடைகிறது. அதே சமயம், தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க ஜூன் 6-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 29 -ல் தரவரிசைப் பட்டியல்

தொடர்ந்து ஜூன் 5-ஆம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து, ஜூன் 8 முதல் 20-ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் நடைபெறும்.

இறுதியாக, ஜூன் 29-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. கலந்தாய்வு தொடங்கும் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

=====