தமிழ்நாடு ரேஷன் கடைகளில் , விடுமுறை மற்றும் பணி நேரம் குறித்து ஆய்வு செய்ய உத்தரவு
தமிழ்நாடு ரேஷன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களில் வேலை நேரம் மற்றும் விடுமுறை நாள் ஆகியவை குறித்து பரிசீலனை செய்யது பதிலளிக்க தமிழக அரசு சார்பில் உத்தரவானது அளிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் செயல்படும் ரேஷன் கடைகள்
மொத்தமாக தமிழகத்தில் கூட்டுறவுத்துறை மற்றும் இதர துறைகளின் கீழ் மொத்தம் 34,916 ரேஷன் கடைகள் அதாவது நியாய விலை கடைகள்இயங்கி வருகின்றன.
இக்கடைகள் மூலம் தமிழக்த்தில் உள்ள குடும்ப அட்டை தாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன, இந்த ரேஷன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களின் வேலை நேரம் மற்றும் , விடுமுறை நாட்கள் ஆகியவற்றி பரிசீலிக்குமாறு தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தின் கோரிக்கை மனுவானது , தமிழக அரசிடம் அளிக்கப்பட்டிருந்தது
ரேஷன் கடை ஊழியர்களின் கோரிக்கை என்ன ?
தமிழகத்தில் செயல்பட்டு நியாய விலை கடைகளில் பல் லட்சகணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர் . இவர்களில் நுகர்பொருள் வாணிபக் கழக குடோன்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை வேலைநாளாகவும்,
ஞாயிற்று கிழமை விடுமுறை நாளாகவும் உள்ளது. ஆனால்,நியாய விலை கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறையாகவும், ஞாயிற்றுக்கிழமை வேலை நாளாகவும் இருந்து வருகிறது
இந்த விடுமுறையால் நியாய விலை கடை ஊழியர்களுக்கு பயனும் இல்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் ரேஷன் கடைகள் காலை 8.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மீண்டும் பிற்பகல் 3 மணி முதல் மாலை 7 மணி வரையிலும் செயல்பட்டு வருகிறது
சில நேரங்களில் இந்த பணி நேரம் நீண்டு இரவு வரை செல்வதாகவும் இதனால நியாய விலை கடை ஊழியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கும் , உடல் உழைப்பில் ஈடுப்படுத்தப்படுவதாகவும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது ,
வேலை நேரம் மற்றும் விடுமுறை நாட்களை மாற்றியமைக்க கோரிக்கை
குறிப்பாக தமிழகத்தில் பணிபுரியும் நியாயவிலை கடை ஊழியர்களின் முக்கியமான கோரிக்கையாக வேலை நேரம் மற்றும் வார இறுது நாளில் விடுமுறை நாளை அறிவிக்க வேண்டும் என்று கூறி கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.
மேலும் புதிய பணி நேரமாக காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மதியம் 2 மணி முதல் 6 மணி வரையும் செயல்படும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது
இது தொடர்பாக ஆய்வு செய்து விளக்கம் அளிக்க உத்தரவு
தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தின் கோரிக்கை மனு தொடர்பாக முறையான ஆய்வு செய்து , விளக்கம் அளிக்குமாறும் வார விடுமுறை, பணி நேரம் தொடர்பாக மாற்றம் செய்வவதால் ஏற்படும் சிக்கல்களுக்கு உரிய தீர்வை அளிக்குமாறு துணைப்பதிவாளர்களுக்கு பொது விநியோக திட்ட இணைப்பதிவாளர் வெளியிட்டுள்ள உத்தரவில் இவ்வாறாக தெரிவிக்கப்பட்டுள்ளது
விரைவில் அறிவிப்பு
இந்த நிலையில் தமிழக அரசின் இந்த உத்தரவு நியாய விலை கடைக்காரர்களின் எதிர்ப்பார்த்த கோரிக்கையை நிறைவேற்றுமா என்பதே நியாய விலை கடைகாரர்களின் அறிவிப்பாக உள்ளது
====================