Today Gold and Silver Price Decreased Per 1 Gram Rs 580 One Sovereign Rate Update in Chennai  Source : Google
தமிழ்நாடு

சரிவை சந்தித்த ஆபரணத் தங்கம் : வெள்ளி விலையும் குறைந்தது

Today Gold and Silver Price Decreased in Chennai : தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 4,640 சரிந்துள்ளது, வெள்ளி விலையும் கிலோவுக்கு 20,000 ரூபாய் குறைந்துள்ளது.

Rohini

விலைக்கான நிர்ணயம்

Today Gold and Silver Price Decreased in Chennai : நேற்று (பிப்.3) வர்த்தக முடிவின்போது ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,560 உயர்ந்து அதிர்ச்சி தந்த தங்கம் விலை, இன்று (பிப்.4) காலையிலேயே பவுனுக்கு ரூ.4,640 சரிவை சந்தித்துள்ளது.

சர்​வ​தேச பொருளா​தாரச் சூழல் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபா​யின் மதிப்பு ஆகிய​வற்​றின் அடிப்படை​யில், தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

நகைப்பிரியர்களின் எதிர்பார்ப்பு

கடந்த ஜன.30, 31 தேதிகளிலும், பிப்.2-ம் தேதியும் தங்கம் விலை ஏறிய வேகத்தில் இறங்கி வாடிக்கையாளர்களை மன ஆறுதலை அளித்திருந்த நிலையில் நேற்று மீண்டும் உச்சத்தை எட்டியிருக்கிறது . மூன்று நாட்களில் பவுனுக்கு ரூ.22,800 வரை குறைந்திருந்தது . அந்த வகையில் நேற்று அதிகரித்திருந்த நிலையில் இன்று மீண்டும் குறைந்துள்ளது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை

விலை குறைப்பு நீடிக்காதா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை மொத்தமாக பவுனுக்கு ரூ.2,560 அதிகரித்தது.

இன்றைய நிலவரப்படி

தங்கம் சவரன் 1,14,560

ஆனால் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 4,640 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

கிராமுக்கு 580 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 14,320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம் :

வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 300 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிலோவுக்கு 20 ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு கிலோ 3 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்றய தங்கத்தின் நிலவரம்

நேற்றைய நிலவரப்படி பிப்.4) காலை, தங்கம் விலை கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14900-க்கும், பவுனுக்கு ரூ.5,040 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,19,200-க்கும் விற்பனையானது.

வெள்ளி நிலவரம்

வெள்ளி விலை நேற்று மதியம் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.300-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று மேலும் ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.320-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.3,20,000-க்கும் விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது.