Today Gold and silver price in Chennai Gold Rate surged twice today, hitting new all-time highs latest update in Tamil Google
தமிழ்நாடு

ரூ. 4,120 அதிகரிப்பு, ஷாக் கொடுக்கும் தங்கம் : வெள்ளியும் உயர்வு

Today Gold and silver price in Chennai : தங்கம் விலை இன்று இரண்டு முறை அதிரடியாக உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

Kannan

புதிய உச்சத்தில் தங்கம்

Today Gold and silver price in Chennai : புத்தாண்டு தொடங்கியதில் இருந்து தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து உச்சங்களை தொட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக தினமும் 2 முறை உயர்ந்து தங்கம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1 லட்சத்தை எட்டிய போதே அது சாமான்ய மக்களின் எட்டாத உயரத்திற்கு சென்று விட்டது. அத்தோடு நிற்காமல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது தங்கம் விலை.

ஒரு சவரன் ரூ.1.15,000

இன்றைய நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்தை கடந்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றைய விலை நிலவரம்

நேற்று ஒரே நாளிலேயே இரண்டு முறை தங்கம் விலை அதிகரித்தது. கடைசியாக மாலை நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,320 உயர்ந்து ரூ.1,11,200க்கும், கிராமுக்கு ரூ.290 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,900க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று அதிரடி உயர்வு

இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் மீண்டும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. கிராமுக்கு ரூ.350 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,250க்கும், சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,14,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீள்வதற்குள், பகல் 12 மணி அளவில் மீண்டும் ஏற்றது கண்டது தங்கம்.

22 காரட் தங்கம் விலை கிராமுக்கு மட்டுமே ரூ.165 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 14,415க்கும், சவரனுக்கு ரூ.1,320 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 115,320க்கும் விற்பனை செய்யப்படுகிறது. காலை, மாலை என இரண்டு வேளையும் சேர்த்து ஒரே நாளில் ரூ.4,120 உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

அதே போல, 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,950க்கும், சவரனுக்கு ரூ.480 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 95,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் உயர்வு

வெள்ளி விலை காலையில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில் தற்போது அதிரடியாக கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.345க்கும், கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.3,45,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி

ரூபாயின் மாற்று மதிப்பு சரிவும் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 4,840 டாலருக்கு மேல் அதிகரித்ததும் தங்கம் விலை உயர்வுக்கு காரணம் ஆகும். இது மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவே வல்லுனர்கள் கூறுகின்றனர்.

போரை விரும்பும் அமெரிக்கா

வெனிசுலாவை தொடர்ந்து கிரீன்லாந்தையும் கைப்பற்றும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வருவது, உலக அளவில் பதற்றத்தை அதிகரித்து இருப்பதால், சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றன.

============