Today is the last day to amend the voter list in Tamil Nadu. The final voter list will be published on the 17th. 
தமிழ்நாடு

SIR : தமிழகத்தில் இன்றுடன் நிறைவு : 17ல் இறுதி வாக்காளர் பட்டியல்

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய இன்றே கடைசி நாள். 17ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

Kannan

தமிழகத்தில் SIR பணிகள்

Today is the last day to amend the voter list in Tamil Nadu. The final voter list will be published on the 17th : SIR : சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் தமிழகத்தில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் எஸ்ஐஆர் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழகம் முழு​வதும் வாக்​காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணிகள் மேற்கொள்​ளப்​பட்டு டிசம்பர் 19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது.

97.37 லட்சம் பெயர்கள் நீக்கம்

வரைவு வாக்காளர் பட்டியலில் 97.37 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தது. மரணம் அடைந்தவர்கள், இரண்டு இடங்களில் பட்டியலில் இடம் பெற்றிருந்தவர்கள் பெயர்கள் நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

வாக்காளர் திருத்த பணிகள்

திருத்த பணிகளை மேற்கொண்டு, மீண்டும் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி இருந்தது. அதன்படி, 34.75 லட்சம் பேர் திருத்தம் மற்றும் புதியதாகச் சேர்க்கக் கோரி விண்ணப்பித்திருந்தனர். வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றபோதும் உரிய ஆவணங்களை அளிக்காத சுமார் 12 லட்சம் பேருக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டிருந்தது.

இன்றுடன் அவகாசம் நிறைவு

விண்ணப்பித்தவர்கள் இடம் இருந்து ஆவணங்களை பெற்று அதன் மீதான விசாரணையை முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்ட நிலையில் அதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.

17ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல்

எஸ்.ஐ.ஆர் பணிகள் இன்றுடன் நிறைவுபெறவுடன் ஏற்கனவே திட்டமிட்டபடி, வரும் 17ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ளது. அதன் அடிப்படையில் தான் வரும் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது.

இந்த இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழகத்தில் சுமார் 5 கோடியே 65 லட்சம் வாக்காளர்கள் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

=====