Train ticket bookings for the Pongal festival begin the day after tomorrow (November 13). source:thamizhalai,ai generated
தமிழ்நாடு

”நவம்பர் 13ம் தேதி தொடக்கம்” : பொங்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு! : முழு விபரம்...!

பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை மறுநாள் ( நவம்பர் 13) தொடங்குகிறது.

Kannan

Train ticket bookings for the Pongal festival begin the day after tomorrow (November 13).

பொங்கல் பண்டிகை

தீபாவளியை சொந்த ஊர்களில் பொதுமக்கள் கொண்டாடி விட்டு வழக்கமான பணிகளுக்கு திரும்பி விட்டனர். இன்னும் 2 மாதங்களில் பொங்கல் திருநாள் வர இருக்கிறது.

பொதுமக்களை பொருத்தவரை அடுத்த கொண்டாட்டமான செய்திதான் இது.பொங்கல் பண்டிகை ஜனவரி மாதம் கொண்டாடப்படவிருக்கும் நிலையில், அதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு விரைவில் தொடங்குகிறது.

குறிப்பாக நீண்ட தூரப் பயணத்திற்கு பெரும்பாலானோர் ரயில் போக்குவரத்தையே நம்பியிருக்கிறார்கள். அப்படி ரயில் பயணம் செய்வதற்கு 60 நாள்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.

நவ.13 முதல் டிக்கெட் முன்பதிவு

அதன்படி ரயில் டிக்கெட் முன்பதிவு நவம்பர் 13ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கப்படுகிறது.

ஜன 15 பொங்கல் பண்டிகை

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15ம் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படவிருக்கிறது. 14ம் தேதி போகிப் பண்டிகை ஆகும்.

போகி பண்டிக்கைக்கு ஒருநாள் முன்பாக ( ஜனவரி 12 ) சொந்த ஊர் செல்ல விரும்புவோர் வரும் 13ம் தேதி டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும்.

ஜனவரி 13ம் தேதி (புதன்) பயணம் செய்ய விரும்புவோர் நவ.14 சனிக்கிழமையும், ஜன 14ம் தேதி (வியாழன்) பயணம் செய்ய விரும்புவோர் நவ. 15ம் தேதி ஞாயிறன்றும் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும்.

ஜனவரி மாதம் 17ஆம் தேதி காணும் பொங்கல் வருகிறது.ஜனவரி 18ஆம் தேதி ஊர் திரும்ப வேண்டும் என்றால் நவ. 19ஆம் தேதியும், ஜன. 19ஆம் தேதி ரயிலுக்கு நவ.20ஆம் தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று தெரிய வந்துள்ளது.

ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலிகள் வழியாகவோ அல்லது நேரில் டிக்கெட் கவுன்டர்களிலோ முன்பதிவு செய்யலாம்.

டிக்கெட் முன்பதிவு செய்யும் முறைகள்

ஆன்லைன் முன்பதிவு. IRCTC அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது கைபேசி செயலி மூலமாக காலை 8:00 மணி முதல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

நேரடி முன்பதிவு மையங்கள். அனைத்து ரயில் நிலையங்களிலும் உள்ள கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு கவுன்டர்கள் மூலமாகவும் பயணிகள் நேரடியாக டிக்கெட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

==================