transparency at direct paddy procurement centres, govt introduced farmers' helpline 9500801465 source:thamizhalai,ai generated
தமிழ்நாடு

”நெல் கொள்முதல், மூட்டைக்கு காசு கேட்டால்...?” : புகார் தர வாட்ஸ்அப் எண் 9500801465 : தமிழக அரசு அதிரடி நடவடிக்கை..!

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய தமிழக அரசு 9500801465 என்ற உழவர் உதவி மைய WhatsApp எண்ணை அறிமுகம் செய்துள்ளது.

Kannan

விவசாயிகளை ஏமாற்ற முடியாது

இந்திய நாட்டின் முதுகெலும்பாக விளங்குkf விவசாயிகளின், நலனை காப்பது ஒவ்வொரு அரசின் தலையாய கடமையாகும். விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல் மணிகளை நியாயமான விலையில் விற்பனை செய்வதற்கு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை (Direct Procurement Centers) இயக்கி வருகிறது.

நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு

கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் சில முறைகேடுகளும், லஞ்சப் புகார்களும் விவசாயிகளுக்குப் பெருஞ்சுமையாக உருவெடுத்து வருகின்றன.

இந்நிலையை மாற்றி, வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு அதிரடி நடவடிக்கைகளையும் வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.

தமிழக அரசின் நடவடிக்கை - புகார் எண்

தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, நெல் கொள்முதல் நிலையங்களில் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட கடுமையான நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

முக்கியமாக, கொள்முதல் நிலையங்களில் உழவர்களிடம் சட்டவிரோதமாகப் பணம் வசூலிப்பது போன்ற முறைகேடுகளைத் தடுப்பதற்குச் சிறப்புப் புகார் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

உழவர் உதவி மைய WhatsApp புகார் எண்: 95008 01465

நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சமோ அல்லது கூடுதல் பணமோ கேட்கப்பட்டால், விவசாயிகள் உடனடியாக இந்த 95008 01465 என்ற WhatsApp எண்ணிற்குத் தங்கள் புகார்களை அனுப்பிப் தீர்வைப் பெறலாம் எனத் தமிழக அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

எனவே, நெல் கொள்முதல் நிலையங்களில், இனி விவசாயிகள் கூடுதல் பணம் எதுவும் கொடுக்காமல், தாங்கள் கொண்டு வரும் நெல்லை விற்பனை செய்யலாம். அதையும் மீறி லஞ்சம் கேட்டால், வழக்கு பாயும்.

==============================