Transport and Road Safety Commission warns of action if Omni buses charge high fares  google
தமிழ்நாடு

சட்டமன்ற தேர்தல் : ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூல் : போக்குவரத்து ஆணையரகம் கடும் எச்சரிக்கை

தேர்தலை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு வாக்களிக்க செல்லும் மக்களிடம் அளவுக்கு அதிகமாக கட்டணங்கள் வசூல் செய்யும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Rohini

தமிழக சட்டமன்ற தேர்தல்

தமிழகத்திற்கு சட்டமன்ற தேர்தல் வருகிற 23 ம் தேதி நடைபெற இருக்கிறது , இந்த நிலையில் இன்றுடன் அனைத்து கட்சிகளுக்கும் பரப்புரை பிரச்சாரம் நிறைவடைய இருக்கும் நிலையில் . அனைத்து கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

போக்குவரத்து துறை எச்சரிக்கை

இந்த நிலையில் தேற்றுதலை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு வாக்களிக்க செல்லும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு ,அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ,போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

போக்குவரத்து ஆணையகம் வெளியிட்டுள்ள அறிக்கை

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப். 23 அன்று நடைபெறுவதை முன்னிட்டு (21.04.2026 முதல் 26.04.2026 வரை) பொதுமக்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகள் அதிகப்படியான கட்டணம் வசூல் செய்தால்

அதனைத் தடுக்க தமிழ்நாடு முழுவதும் வட்டாரப்போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து சோதனைச்சாவடி ஆய்வாளர்கள் அடங்கிய சிறப்புக்குழு அமைக்கப்பட்டு இருப்பதாகவும்

அவ்வாறு இயங்கும் ஆம்னி பேருந்துகளை தீவிரமாக சோதனை செய்து அனுமதி ரத்து போன்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகார்களை தெரிவிக்க வேண்டுகோள்

வாக்களிக்க சொந்த ஊர் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக போக்குவது ஆணையகம் , அதிகம் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் குறித்து புகார்களை மக்கள் தெரிவிக்கலாம் என்று போக்குவரத்து ஆணையகம் தெரிவித்துள்ளது.

இலவச புகார் எண்கள் அறிவிப்பு

அதிக கட்டணம் வசூலிப்பதாக தெரியவந்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு கீழ்காணும் அலைப்பேசி எண்கள் மூலம், வாட்ஸ் ஆப், குறுஞ்செய்தி மற்றும் குரல் பதிவு மூலமாக புகார் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. அதன்படி போக்குவது அனன்யம் அறிவித்துள்ள எங்களை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்து

போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம், சென்னை 1800 425 6151

இணைப்போக்குவரத்து ஆணையரகம், சென்னை (வடக்கு) 99442 53404

இணைப்போக்குவரத்து ஆணையரகம், சென்னை (தெற்கு) 97905 50052

இணைப்போக்குவரத்து ஆணையரகம், மதுரை 90953 66394

இணைப்போக்குவரத்து ஆணையரகம், கோயம்புத்தூர் 91235 93971

துணைப்போக்குவரத்து ஆணையரகம், விழுப்புரம் 96773 98825

துணைப்போக்குவரத்து ஆணையரகம், வேலூர் 98400 23011

துணைப்போக்குவரத்து ஆணையரகம், சேலம் 78456 36423

துணைப்போக்குவரத்து ஆணையரகம், ஈரோடு 80569 40040

துணைப்போக்குவரத்து ஆணையரகம், திருச்சிராப்பள்ளி 90660 32343

துணைப்போக்குவரத்து ஆணையரகம், விருதுநகர் 90257 23800

துணைப்போக்குவரத்து ஆணையரகம், திருநெல்வேலி 96981 18011

துணைப்போக்குவரத்து ஆணையரகம், தஞ்சாவூர் 95850 20865

===============