"True loyalists of MGR, Amma begun to move away from Palaniswami and towards TVK," stated Aadhav Arjuna. source:thamizhalai,ai generated
தமிழ்நாடு

"எடப்பாடி காணாமல் போவார்” : தவெக நோக்கி எம்ஜிஆர், ஜெயலலிதா விசுவாசிகள் : அடித்துச் சொல்லும் ஆதவ் அர்ஜுனா..!

"உண்மையான எம்.ஜி.ஆர் விசுவாசிகளும், அம்மாவின் விசுவாசிகளும் பழனிசாமி அவர்களை விடுத்து, தமிழக வெற்றிக் கழகத்தை நோக்கி வர ஆரம்பித்து விட்டார்கள்” என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

Kannan

தவெக அமோக வெற்றி

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது தமிழக வெற்றிக் கழகம். முதல்வர் விஜய்யை பொருத்துவரை இது பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.

திமுக 2ம் இடம், அதிமுக 3வது இடம்

இடைத்தேர்தலில் திமுக 2வது இடம் பெற, சட்டமன்ற பொதுத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இருந்த அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இது அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

அதிமுகவின் 60% வாக்குகள் தவெகவிற்கு..

தேர்தல் வெற்றியை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "அதிமுகவின் 60 சதவீத வாக்குகள் தவெகவிற்கு வந்திருக்கிறது. ஏனென்றால் அதிமுகவும் திமுகவும் சேர்ந்து தவெகவை வீழ்த்த வேண்டும் என்று நினைத்தனர்.

திமுகவுடன் அதிமுக சதி

அதனால் தான் எடப்பாடி பழனிசாமி "திமுகவும் ஆதிமுகவும் நல்லாட்சி கொடுத்தது" என பேசினார். எடப்பாடி பழனிசாமியின் பொய் பிரச்சாரங்கள் அதிமுக தொண்டர்களுக்கு புரிந்ததால் தான் இன்றைக்கு தமிழக வெற்றிக் கழகம் வெற்றி அடைந்திருக்கிறது.

அதிமுகவினரை வரவேற்கிறோம்

"அதிமுகவில் 1,300 ஒன்றிய செயலாளர்கள் இருக்கிறார்கள்; கிளைக்கழக செயலாளர்கள் 12,000–13,000 பேர் இருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட அதில் 70 சதவீதம் ஒன்றிய செயலாளர்கள் எங்களை கடந்த 10 நாட்களாக தொடர்பு கொண்டு இருக்கிறார்கள்.

அதிமுகவின் ஒன்றிய, கிளைக்கழகம் உள்ளிட்ட ஒட்டுமொத்த கட்டமைப்பையும் நாங்கள் வரவேற்கிறோம்.

எம்ஜிஆர் விசுவாசிகள் தவெகவிற்கு வரவேண்டும்

உண்மையான எம்.ஜி.ஆர் விசுவாசிகளும், அம்மாவின் விசுவாசிகளும் பழனிசாமி அவர்களை விடுத்து, தமிழக வெற்றிக் கழகத்தை நோக்கி வர ஆரம்பித்து விட்டார்கள்.

எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் தவெக

ஏற்கனவே மாவட்ட செயலாளர்கள் வர ஆரம்பித்து விட்டார்கள். அடுத்து ஒட்டுமொத்த கட்சியின் ஒன்றிய செயலாளர்கள், கிளைக்கழக செயலாளர்கள், நகர செயலாளர்கள் அனைவரும் தமிழக வெற்றிக் கழகத்தைத்தான் அம்மா உருவாக்கிய, எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுகவாக பார்க்கிறார்கள்.

எங்களுடைய தலைவர் விஜய் அவர்களை எம்.ஜி.ஆராக பார்க்கிறார்கள்; தைரியத்தில் அம்மாவாக (ஜெயலலிதா) பார்க்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சியுடன் அதிமுகவை ஒப்பிட்ட ஆதவ் அர்ஜுனா, "1972-ல் கட்சி தொடங்கிய எம்.ஜி.ஆர், 1977-ல் வெற்றி பெறுவாரா என்ற ஒரு கேள்வி இருந்தது. அப்போது காங்கிரஸினுடைய வாக்கு வங்கி 40 சதவீதம் இருந்தது.

எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கிய பிறகு, காங்கிரஸினுடைய அந்த 40 சதவீத வாக்குகள் அப்படியே எம்.ஜி.ஆரிடம் வந்தது. காங்கிரஸ் நிர்வாகிகள் எம்.ஜி.ஆரிடம் சென்று சேர்ந்தார்கள்.

பக்தவத்சலம் நிலை தான் எடப்பாடிக்கு

அந்த வரலாறு மீண்டும் நடப்பதாகத்தான் நான் பார்க்கிறேன். அப்போது இருந்த பக்தவத்சலம் அவர்கள் தான் இப்போது இருக்கும் எடப்பாடி.

பக்தவத்சலம் இருந்தபோதுதான் காங்கிரஸின் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் எம்.ஜி.ஆரிடம் போய் சேர்ந்தார்கள்.

அம்மாவின் தொண்டர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து விட்டார்கள். அதிமுகவின் அடிப்படைத் தொண்டர்களும் இணைந்து கொண்டிருக்கிறார்கள்.

பலரும் இணைவதற்குக் கோரிக்கை கொடுத்துள்ளனர்; அதை நாங்கள் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.

எப்படி பக்தவத்சலம் அவர்களின் தலைமையால் காங்கிரஸ் வீழ்ந்து, காங்கிரஸின் வாக்கு வங்கி எம்.ஜி.ஆரிடம் சென்றதோ, அதே மாதிரியான நிகழ்வு இந்த இடைத்தேர்தல் மூலம் நடந்திருக்கிறது.

எடப்பாடிக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்காது

இபிஎஸ் அவர்களுக்கு ஒரு ஓட்டு கூட கிடையாது. இப்போது வரை இரட்டை இலையினால் தான் ஓட்டு இருக்கிறது. மக்களும் தொண்டர்களும் அவர் மீது நம்பிக்கையிழந்து விட்டார்கள்.

விரைவில் பழனிசாமியின் அதிமுக, திமுகவுடன் சேரும். பழனிசாமிக்கு தேர்தல் கணக்கு தெரியாது. திமுக வாங்கிய ஓட்டும் அதிமுக வாங்கிய ஓட்டும் சேர்ந்து தேர்தலில் ஜெயித்து விடலாம் என நினைப்பார்.

இபிஎஸ் காணாமல் போய்விடுவார்

ஆனால், அதிமுக தொடங்கியதே திமுக எதிர்ப்பு மனநிலையில் தான். அவங்க ரெண்டு பேரும் சேரும்போது வாக்கு வங்கி தவெக பக்கம் வந்துவிடும், இபிஎஸ் காணாமல் போய்விடுவார்” என்று ஆதவ் அர்ஜுனா காட்டமாக விமர்சித்தார்.

===================