Tunnel excavation work completed from Lighthouse to Mylapore. Chennai Metro administration announcement Source : Google
தமிழ்நாடு

Metro : கலங்கரை விளக்கம் to மயிலாப்பூர் : சுரங்கம் தோண்டும் பணி நிறைவு : சவலாக நின்ற பாரம்பரிய கட்டிடங்கள்

Lighthouse to Mylapore Metro Train Project : பிளமிங்கோ இயந்திரம் மூலம் கலங்கரை விளக்கம் முதல் மயிலாப்பூர் வரை சுரங்க தோண்டும் பணி, வெற்றிகரமாக நிறைவு பெற்றதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

Rohini

வெற்றிகரமாக பணியை நிறைவு செய்த பிளமிங்கோ

Lighthouse to Mylapore Metro Train Project : யூஜி-1 ஒப்பந்தத்தின் கீழ், “பிளமிங்கோ” என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் கலங்கரை விளக்கத்திலிருந்து சுரங்கம் அமைக்கும் பணியை தொடங்கி திருமயிலையில் வந்து வெற்றிகரமாக வந்தடைந்துள்ளது. இதன் மூலமாக சிறப்பாக தனது பணியை நிறைவு செய்திருக்கிறது பிளமிங்கோ.

சென்னையின் நெரிசலான பகுதிகளை சவாலாக மாற்றி வெற்றி கண்ட இயந்திரம்

சிமென்டேஷன் இந்தியா நிறுவனத்தால் 1,985 மீட்டர் நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்ட இந்த சுரங்க பணி சென்னையின் மிகவும் முக்கியமான மற்றும் நெரிசலான பகுதிகளை சிறப்பாக முடித்திருக்கிறது .

குறிப்பாக சென்னை கலங்கரை விளக்கம், அகில இந்திய வானொலி நிலையம், ரஷ்ய தூதரகம், உள்ளிட்ட பல வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் முக்கியமான கட்டிடங்களுக்கு அடியில் வெற்றிகரமாகக் கடந்து வந்துள்ளது இந்த இயந்திரம்.

அடுத்த சுரங்கம் அமைக்கும் பணி

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில், 2ம் கட்ட திட்டத்தில் 118.9 கி.மீ. நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களில் இந்த சுரங்கம் அமைக்கும் திட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

கட்டம் 2, வழித்தடம் 4ல் கலங்கரை விளக்கத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கி.மீ. நீளத்திற்கு வழித்தடம் அமைக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

===