TVK Chief Vijay Condemns MK Stalin Over Dharapuram Campaign Remarks
தவெக தலைவர் விஜய்யின் கண்டன அறிக்கை
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில், தவெக வேட்பாளர் திருமதி சத்தியபாமா குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருவ கேலி செய்து பேசியதாக எழுந்துள்ள சர்ச்சைக்கு, தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதல்வருமான ச.ஜோசப் விஜய் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
அவதூறு பரப்புரை குற்றச்சாட்டு
தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரக் கூட்டம் என்ற பெயரில், திமுக சார்பில் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் ஓர் அவதூறு மற்றும் அநாகரிகக் கூட்டத்தை நடத்தியுள்ளதாக தவெக தலைவர் விஜய் சாடியுள்ளார்.
தவெக வேட்பாளரான சகோதரி திருமதி சத்தியபாமா குறித்து உருவ கேலி செய்து, மிகவும் அநாகரிகமாகப் பேசிப் புளகாங்கிதம் அடைந்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
திமுகவின் அரசியல் போக்கு மீதான விமர்சனம்
திமுக சார்பில் வளர்க்கப்பட்டு வரும் ஆபாசநதி, வன்மநதி, வக்கிரநதியை உருவாக்கியதே தான்தான் என்பதை மு.க.ஸ்டாலின் பெருமையுடன் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயகத்திற்கு விரோதமானவர்கள் திமுகவினர்
மேலும், ஜனநாயகத்திற்கு விரோதமானவர்கள் திமுகவினர் என்றும், ஆபாசமும் வன்மமும் வக்கிரமும் திமுகவின் மூலக்கூறிலும் மூளைக்கூறிலும் கலந்துள்ளதை தமிழக மக்கள் அனைவரும் உணர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் பதிலடியும் வன்மையான கண்டனமும்
பெண்களைப் பற்றி ஆபாசமாகப் பேசுவதில் வல்லவர்களான திமுகவிற்கு தமிழக மக்களும் தாராபுரம் தொகுதி மக்களும் தக்க பதிலடியைக் கொடுப்பார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பெண்களை ஆபாசமாகப் பேசி வரும் திமுகவிற்கு, தமிழகப் பெண்களின் மகனாக, அண்ணனாக, தம்பியாகத் தனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தனது அறிக்கையில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு நேரமும், தலைமை தேர்தல் அதிகாரியின் முக்கிய விதிமுறைகளும்!
=============