TVK Education Award Ceremony Postponed CM Vijay source:thamizhalai
தமிழ்நாடு

நாளை நடைபெறவிருந்த த.வெ.க. கல்வி விருது வழங்கும் விழா திடீர் ஒத்திவைப்பு : என்ன காரணம்?

த.வெ.க. கல்வி விருது வழங்கும் விழாவில் பங்கேற்கும் மாவட்ட மாணவர்களின் விவரப் பட்டியல் தயாரிக்கும் பணிகளும் நடைபெற்று வந்தன.

Kavitha prasanna

Preparations were also underway to compile a list of students from the district who would participate in the T.V.K. educational awards ceremony.

சென்னை நீலாங்கரையில் நாளை நடைபெறவிருந்த முதலமைச்சர் விஜய் பங்கேற்கும் த.வெ.க. இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கல்வி விருது வழங்கும் விழா பின்னணி

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாவட்டம் மற்றும் சட்டசபைத் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்குக் கல்வி உதவித்தொகையும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

இதன் அடிப்படையில், இந்த ஆண்டுக்கான முதற்கட்ட கல்வி உதவித்தொகை மற்றும் பரிசளிப்பு விழா கடந்த வாரம் சிறப்பாக நடைபெற்றது.

2-ஆம் கட்ட விழா திடீர் ஒத்திவைப்பு

இதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்ட பரிசளிப்பு விழா நாளை (நவம்பர் 18) சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

விறுவிறுப்பாக தயாரான மாணவர்களின் விவரப் பட்டியல்

இந்த விழாவில் முதலமைச்சர் விஜய் நேரில் பங்கேற்று மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்குவார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்ததுடன், விழாவில் பங்கேற்கும் மாவட்ட மாணவர்களின் விவரப் பட்டியல் தயாரிக்கும் பணிகளும் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், சென்னை நீலாங்கரையில் நாளை நடைபெறவிருந்த த.வெ.க. கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சி திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒத்திவைப்புக்கான காரணம் மற்றும் புதிய தேதி அறிவிப்பு

இந்த விழாவை ஒருங்கிணைக்கும் அமைச்சர் ஆனந்த் தற்போது டெல்லியில் உள்ள நிலையில், நிர்வாகக் காரணங்களுக்காக நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், ஒத்திவைக்கப்பட்ட இந்தக் கல்வி விருது வழங்கும் விழாவுக்கான புதிய தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

=================