TVK election manifesto to be released soon Serious consultation led by Arunraj IRS Source : TVK IT Wing
தமிழ்நாடு

விரைவில் வெளியாகும் தவெக தேர்தல் அறிக்கை! : அருண்ராஜ் தலைமையில் தீவிர ஆலோசனை

TVK Election Manifesto 2026 : த.வெ.கவின் கொள்ளகை பரப்பு செயலாளர் அருண்ராஜ் தலைமையில் அக்கட்சின் தேர்தல் அறிக்கை குறித்த நடவடிக்கைகள் நடந்து வருகின்றது.

Rohini

விரைவில் வெளியாகும் தேர்தல் அறிக்கை

TVK Election Manifesto 2026 : தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) தன்னுடைய கட்சி குறித்த தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது . கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவை அக்கட்சின் நிர்வாகி அருண்ராஜ் வழிநடத்தி வருகிறார்.

நடந்து முடிந்த பொதுக்கூட்டங்களில் நடிகர் விஜய் ஏற்கனவே சில முக்கிய வாக்குறுதிகளை அறிவித்திருந்த நிலையில், முழு தேர்தல் அறிக்கை ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் அறிக்கை வெளியீட்டு தேதி குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

கட்சி வட்டாரங்கள் கூறுவது என்ன

வருகிற மார்ச் 4-ஆம் தேதி தஞ்சையில் நடைபெறவுள்ள விஜயின் பரப்புரைக் கூட்டத்திற்குப் பிறகு இறுதி தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் மார்ச் 4 அல்லது அதற்கு அடுத்த சில நாட்களில் அறிக்கை வெளியாக வாய்ப்பு உள்ளது.

மேலும் தஞ்சையில் மார்ச் 4-ஆம் தேதி த.வெ.க நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்து நடைபெறும் த.வெ.கவின் கூட்டம்

தன் கட்சின் சார்பாக பல்வேறு மாநாடு கூட்டங்களை நடத்தி வரும் த.வெ.கவின் அடுத்த கூட்டமானது செங்கிப்பட்டியில் நடத்த அனுமதி கோரி த.வெ.க நிர்வாகிகள் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் தேர்தல் அறிக்கை தொடர்பான இறுதி ஆலோசனைகள் நடைபெற வாய்ப்பு அதிகம் இருப்பதாக எதிர்பார்க்கபடுகிறது