Tvk Executives Petition: Petition to Election Officer Archana Patnaik to provide adequate security campagin google
தமிழ்நாடு

விஜய் பிரசாரத்திற்கு போதிய பாதுகாப்பு : அர்ச்சனா பட்நாயக்கிடம் TVK மனு : அமித் ஷாவுக்கு அவசர கடிதம்

TVK Vijay Election Campaign : தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்கக்கோரி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்யிடம் தவெக நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர்.

Rohini

தேர்தல் அதிகாரியிடம் மனு

TVK Vijay Election Campaign : தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில பொதுச் செயலர் என். ஆனந்த் மற்றும் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்னாயக்கை நேரடியாக சந்தித்து மனு அளித்தனர்.

மனு அளித்ததன் காரணம்

தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு போதிய அளவு பாதுகாப்பு வழங்க கோரியும்தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த காவல் துறையும் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்பது குறித்தும்,

அயனாவரம் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் திமுகவினர் இடையூறு செய்தது குறித்தும் புகார் மனு அளித்தனர்.

புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது

மேலும், தமிழக வெற்றிக் கழகம் பிரசாரம் மேற்கொள்ளும்போது காவல்துறை முறைய பாதுகாப்புகளை வழங்க வேண்டும் எனவும் புகார் மனுவில்குறிப்பிட்டுள்ளனர் ,

இது குறித்து தவெக நிர்வாகிகள் கூறுகையில், "கொளத்தூர் தொகுதியில் விஜய் பிரசாரத்துக்கு போதிய பாதுகாப்பை தமிழ்நாடு காவல் துறை வழங்கவில்லை. என்று கூறி தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்தனர்

உள்துறை அமைச்சருக்கு கடிதம்

ஒய் பிரிவு பாதுகாப்பு பட்டியலில் உள்ள விஜய்க்கு தமிழகத்தில் போதிய பாதுகாப்பு வழங்க அறிவுறுத்த வேண்டும் என வலியுறுத்தியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு த.வெ.க இணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார் கடிதம் எழுதியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது