TVK government has invited tenders for the demolition of old residential buildings in Pattinapakkam source:thamizhalai,ai generated
தமிழ்நாடு

”பட்டினப்பாக்கத்தில் தான் புதிய தலைமைச் செயலகமா!” : பழைய குடியிருப்புகளை இடிக்க டெண்டர் : தவெக அரசின் திட்டம் என்ன..!

பட்டினப்பாக்கத்தில் உள்ள பழைய குடியிருப்புகளை இடிக்க தவெக அரசு டெண்டர் கோரி இருக்கிறது.

Kannan

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்?

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் ஆயிரத்து 200 கோடி ரூபாயில் கட்டப்படும் என்று சட்டசபையில் அறிவித்து இருந்தார் முதல்வர் விஜய்.

மாற்று இடங்கள் பரிசீலனை

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பவே, அரசு எதிர்ப்பில் இதற்கான நடவடிக்கைகள் கிடப்பில் போடப்பட்டு இருக்கின்றன.

மீனவர்களின் எதிர்ப்பை அடுத்து, பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலகம் திட்டம் கைவிடப்படலாம் என்றும், மாற்று இடங்களை அரசு பரிசீலித்து வருவதாகவும் தகவல் வெளியானது.

பழைய குடியிருப்புகளை இடிக்க டெண்டர்

இப்படி, பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படுமா இல்லையா என்று தொடர்ந்து கேள்விகள் எழுந்து வரக்கூடிய நிலையில், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு அரசு வெளியிட்ட சர்வே எண்ணில் இடம் பெற்றுள்ள வீட்டு வசதி வாரியத்தின் பழைய குடியிருப்புகளை இடித்து அகற்றுவதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.

அதன்படி, சிதிலமடைந்த வீட்டு வசதி வாரியத்தின் 96 குடியிருப்புகளை இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. .

இ-டெண்டர் வெளியீடு

தமிழக அரசின் இன்றைய தேதியிட்ட டெண்டரில், பட்டினப்பாக்கத்தில் உள்ள 96 பழைய குடியிருப்புகளை இடிக்கும் பணிக்கு இ-டெண்டர் விடப்பட்டுள்ளது. இதற்கு இ-ஏல முறையில் டெண்டர் கோரும் நிறுவனங்கள் தேர்வு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 1 வரை அவகாசம்

இன்று வெளியிடப்பட்டிருக்கும் இந்த டெண்டருக்கு, டிசம்பர் 1ஆம் தேதி காலை 11 மணி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை பட்டினப்பாக்கத்தில் சுமார் 25 ஏக்கரில் சட்டப்பேரவை வளாகத்துடன் புதி தலைமைச் செயலகம் அமையவிருக்கிறது.

முன்னதாக, பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என அரசு அறிவித்த நிலையில், அதற்கான 21.37 ஏக்கா் இடத்தை, நிலவகைப்பாடு மாற்றி சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) அனுமதி அளித்திருந்தது, குறிப்பிடத்தக்கது.

==================