TVK government will not fall; there is no chance of that support will continue; Leftists hit back at DMK.  google
தமிழ்நாடு

”தவெக ஆட்சி கவிழாது, அதற்கு வாய்ப்பே இல்லை” : ஆதரவு தொடரும் என திமுகவிற்கு இடதுசாரிகள் பதிலடி...!

முதல்வர் விஜய் தலைமையிலான தோழமைக் கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளா விட்டாலும் அரசுக்கான ஆதரவு தொடரும் என இடதுசாரிகள் தெரிவித்துள்ளனர்

Rohini

தவெக ஆட்சி கவிழாது , திமுகவிற்கு பதிலடி

முதல்வர் விஜய் தலைமையிலான தோழமைக் கட்சிகள் கூட்டத்திலும், அரசின் விருந்திலும்தான் கலந்து கொள்ளவில்லா விட்டாலும் மற்றபடி அரசுக்கான எங்கள் ஆதரவு என்பது தொடரும்

என இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் திமுகவிற்கு இடதுசாரிகள் பதிலடி தந்துள்ளனர்

மு.வீரபாண்டியன் கூறுகையில்,

முதல்வர் விஜய்யை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளோம் என்றும் ,உழைக்கும் மக்களின் கோரிக்கைகளில் தவெக அரசு கவனம் செலுத்த வேண்டும்.

தூய்மை பணியாளர் விவகாரத்தில் தனியார்மயமாக்கும் நடவடிக்கையை கைவிட்டதை வரவேற்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்

மேலும் சாலை பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஏழை, எளிய தொழிலாளர்களின் வாழ்விடங்கள், பணிப் பாதுகாப்பு குறித்து அரசு ஆழ்ந்த சிந்தனைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிவித்தார்

வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு

குடியரசு தலைவர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதற்காக தோழமை கட்சிகள் என்ற சார்பிலே ஆதரவு வழங்கினோம் என்றும்

கம்யூனிஸ்ட் கட்சிகள் முதல்வர் விஜய்யின் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. நாங்கள் ஆட்சியில் பங்கு பெறவில்லை. தோழமை கட்சியாக வெளியிலிருந்து ஆதரவு தருகிறோம் என்று இடது சாரி கட்சிகள் தெரிவித்துள்ளது

ஓன்றிய அரசின் திட்டங்களை எதிர்ப்பதில் தவெக அரசு உறுதியாக இருக்க வேண்டும்

மாநிலங்களின் உரிமையை பறிக்கிற ஒன்றிய அரசின் கடந்த கால அணுகுமுறையை இன்றைய அரசு உணர்ந்திருக்கும். அதிலிருந்து பாடங்களையும் பெற்றிருக்கும்.

அங்கு சமரசம் கூடாது. ஒன்றிய அரசுடன் இருக்கும் நிர்வாக உடன்பாடு, இணக்கங்கள் என்பது வேறு; கொள்கை என்பது வேறு . குறிப்பாக ஒன்றிய அரசின் திட்டங்கள் நாட்டை சீரழிக்கும் நடவடிக்கையாகவே இருக்கும் .

ஒன்றிய அரசின் திட்டங்கள் கார்ப்பரேட் நலனுக்கானது. அதைப் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. மாநில உரிமை, தொழிலாளர்களின் நலனில் தவெக அரசு உறுதியாக இருக்க வேண்டும்” என்பன போன்றவற்றை வலியுறுத்தியுள்ளதாக .வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறுகையில்,

குறிப்பாக தமிழ்நாட்டில் வேலையின்மை என்பது முக்கியப் பிரச்சினையாக இருக்கிறது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கக் கூடிய வகையில் ஏற்கெனவே உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அதில் கூடுதலாக கவனத்தை செலுத்த வேண்டும்.

தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்ப வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர் காலி பணியிடங்களால் கல்வித் தரம் பாதிக்கப்படுகிறத போன்றவற்றில் அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்

சிங்கப்பெண் சிறப்பு படை வரவேற்கத்தக்கது ,

பெண்கள் , குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை வரவேற்கதக்கது, சிங்கப் பெண் படையில் உள்ள அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க சிறப்பு முயற்சி எடுக்க வேண்டும்.மேலும் தமிழக பட்ஜெட்டில் மக்கள் புதிய திட்டங்களை எதிர்பார்க்கிறார்கள் என்று முதல்வர் சந்திபிற்கு பிறகு தெரிவித்துள்ளார்.

தவெக ஆட்சி கவிழ வாய்ப்பே இல்லை என்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த அவர், ஆட்சி தொடரும், அதற்கு இடதுசாரிகள் உறுதியுடன் துணை நிற்பார்கள் என்றும் தெரிவித்தார்.

====================