தமிழகத்தில் தவெக அரசு
தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தவெக, திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது.
முதல்வரானார் விஜய், தமிழகத்தில் முதன்முறையாக கூட்டணி ஆட்சியும் பொறுப்பேற்றது.
பட்ஜெட் தயாரிப்பு பணி தீவிரம்
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி, சட்டசபையில் ஆளுநர் உரை முடிந்த நிலையில், புதிய அரசின் பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
முதல்வர் தொடர் ஆலோசனை
தினமும் பல்வேறு துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். அதன் அடிப்படையில் நிதி அமைச்சர் மரிய வில்சன், பட்ஜெட் தயாரிப்பு தொடர்பான பணிகள் கவனம் செலுத்தி வருகிறார்.
ஆகஸ்டு முதல் வாரம் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று, நிதி அமைச்சர் மரிய வில்சன் ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.
சபாநாயகர் செய்தியாளர்கள் சந்திப்பு
இந்தநிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
ஆகஸ்டு 5ல் பட்ஜெட் கூட்டத்தொடர்
ஆகஸ்டு 5ம் தேதி தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் நேரலை செய்யப்படும்.
ஆக.5ல் தமிழக பட்ஜெட்
ஆகஸ்ட் 5ம் தேதி காலை 10 மணி அளவில் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். நிதி அமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட்டை தாக்கல் செய்து, முக்கிய அம்சங்களை வாசிப்பார்.
ஆக.6ல் வேளாண் பட்ஜெட்
ஆகஸ்ட் 6ம் தேதி வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். வேளாண்துறை அமைச்சர் வினோத் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்வார்.
கடந்த ஆட்சியில் அறிமுக செய்யப்பட்ட தனி வேளாண் பட்ஜெட் முறை, தவெக ஆட்சியிலும் தொடர்வதாக அவர் கூறினார்.
பட்ஜெட் கூட்டத் தொடரை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பது பற்றி அலுவல் ஆய்வுக்குழ கூடி முடிவு செய்யும்.
எம்எல்ஏ கைது - சபாநாயகர் விளக்கம்
எம்எல்ஏவை கைது செய்யும் போது சபாநாயகர் அனுமதி அவசியமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், ” எம்எல்ஏவை கைது செய்ய சபாநாயகரின் முன் அனுமதி தேவையில்லை என்று விளக்கம் அளித்தார்.
தவெக அரசின் முதல் பட்ஜெட்
தவெக அரசின் முதல் பட்ஜெட் என்பதால், தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், முக்கிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறும் எனத் தெரிகிறது.
பொதுமக்கள் எதிர்பார்ப்பு
குறிப்பாக மகளிருக்கு மாதம் 2,500 ரூபாய் திட்டம் செயல்பாட்டிற்கு வர வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
=====================