TVK claiming credit achievements DMK government; questions raised regarding the 'Naan Mudhalvan' scheme as well.  google
தமிழ்நாடு

”திமுகவின் தயவில் ஆட்சி, சாதனைகளுக்கு தவெக ஸ்டிக்கர்” : நான் முதல்வன், சட்டம் ஒழுங்கு : உதயநிதி சரமாரி கேள்வி..!

முதல்வர் விஜய்க்கு திமுக எம்எல்ஏக்கள் சார்பாக பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று சட்டப்பேரவையில் உரையை தொடங்கினார் எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்

Rohini

ஆளுநர் உரை மீதான விவாதம், சட்டப்பேரவையில் உதயநிதி கேள்வி

ஆளுநர் உரையின்மீதான விவாத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின் , முதல் கூட்டத்தொடரில் இருமுறை தமிழ்த்தாய் வாழ்த்துடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாத பொருளாக பேசப்பட்டது

ஆளுநருரிடம் தவெகவிற்கு என்ன சமரசம் நடந்தது உதயநிதி கேள்வி

இருமுறை சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தேசிய கீதமானதி இசைக்கப்பட்டது தொடர்பான விவாதத்தில் , சட்டப்பேரவையின் அதிகாரத்தை ஆளுநரிடம் கொடுக்கும் அளவுக்கு என்ன சமரசம் நடந்தது?" என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பேரவைத் தலைவர், "தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டது. தேசிய கீதம் இருமுறை பாடப்பட்டது என்பதில் எந்த தவறும் இல்லை. அதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை" என்று கூறினார்.

தமிழ்த்தாய் வாழ்த்தை விட , ஆளுநர் உரை முக்கியம் என்று கருதுகிறதா என்று தவெக அரசு

தொடர்ந்து சட்டப்பேரவையில் உரையாடிய உதயநிதி, "தேசிய கீதம் இருமுறை பாடப்பட்டது. அதேபோல தமிழ்த்தாய் வாழ்த்தும் இருமுறை பாடச் சொல்லியிருக்கலாம். தமிழ்த்தாய் வாழ்த்தைவிட ஆளுநர் முக்கியம் என்று நினைக்கிறதா தவெக அரசு?" என்கிற கேள்வியை முன்வைத்தார்

எதிர்க்கட்சி தலைவரின் கேள்விக்கு பதிலளித்த ஆதவ் அர்ஜுனா

ஆளுநருடன் எந்த சமரசமும் இல்லை. முதல்முறையாக ஆளுநர் முன்னிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக ஆளுநர் வெளியேறியபிறகே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது" என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்தார்

நான் முதல்வன் திட்டத்தை முடக்குகிறதா தவெக அரசு

தொடர்ந்து பேசிய உதயநிதி சமீபத்தில் நான் முதல்வன் திட்டத்தின் பெயரை தவெக அரசு மாற்றியமைத்திருந்தது , இது குறித்து கேள்வி எழுப்பிய உதயநிதி ஒவ்வொரு துறையிலும் மாணவர்கள் 'முதல்வன்' ஆக வேண்டும்

என்ற நோக்கத்தில் 'நான் முதல்வன்' திட்டத்தை உருவாக்கினோம். அதனை முடக்கும் முயற்சி நடவடிக்கைகள் நடந்து வருகிறது என்றும் கேள்வியை முன்வைத்தார்

நான் முதல்வன் திட்டத்தை கைவிடுவது ஏன்? நான் முதல்வன் திட்டத்தால் 41 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். யுபிஎஸ்சி போன்ற தேர்வர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. கடந்த யுபிஎஸ்சி தேர்வில் 60ல் 56 பேர் இத்திட்டத்தால் பயன்பெற்றுள்ளனர்

இத்திட்டத்தை முடக்க முயற்சி நடக்கிறது. திட்டத்தை கைவிடுவது ஏன் என்று முதல்வர் பதிலளிக்க வேண்டும் என்று கூறினார்

திமுக ஆட்சியின் சாதனைகளுக்கு தவெக ஸ்டிக்கர் ஒட்டுகிறது

திமுக ஆட்சியின் சாதனைகளுக்கு தவெக ஸ்டிக்கர் ஒட்டுகிறது சில உதாரணங்களை கூறி கேள்வி எழுப்பிய எதிர்கட்சி தலைவர் , நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் பல்வேறு விஷயங்கள் பற்றி பேசியிருக்கிறார்.

பெண்கள் முன்னேற்றம், ஆகியவற்றை பற்றி விஇந்த சாதனைகள் எல்லாம் யார் ஆட்சியில் நடந்தது என்று முதல்வருக்கும் மக்களுக்கும் தெரியும். திமுக ஆட்சியின் சாதனைகளுக்கு தவெக ஸ்டிக்கர் ஒட்டுகிறது" என்று கூறினார்.

=======================