TVK leader Vijay said that upcoming assembly elections 2026 will be battle between me and Stalin  google
தமிழ்நாடு

”விஜய்-ஸ்டாலின் சார் இடையே நடக்கும் போர், தமிழ்நாட்டின் விசில் ப்ளோயர் TVK” தான் : வேலூர் கூட்டத்தில் விஜய் ஆவேசம்

TVK Vijay Vellore Meeting Speech in Tamil : நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தல் எனக்கும், ஸ்டாலின் சாருக்கும் இடையே நடக்கும் போர் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்து இருக்கிறார்.

Kannan

எங்கள் ஓட்டு எங்கள் உரிமை

TVK leader Vijay said that upcoming assembly elections will be battle between me and Stalin : வேலூரில் தவெக சார்பில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், ”எங்கள் ஓட்டு எங்கள் உரிமை, எங்களை யாரும் உரிமை முடியாது. எங்கள் ஓட்டி தவெக தான். யாரையும் நம்பி ஏமாற மாட்டோம் என்று மக்கள் உறுதிமொழி ஏற்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

அனைவரையும் விரைவில் சந்திப்பேன்

ஒவ்வொரு வீட்டிலும் உயிராகவும், உணர்வாகவும் நாம இருக்கணும், உங்கள் அனைவரையும் வந்து சந்திக்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை. எதிர்க்கட்சியாக இருக்கறதால நிறைய தடைகள், தெவக ஆட்சிக்கு வந்ததும் இது நிறைவேறும், எல்லா மக்களையும் நான் சந்திப்பேன். ஒவ்வொரு கிராமத்திற்கும் நான் செல்வேன்.

உங்க லாஜிக் புரியலை

அண்மையில் ஸ்டாலின் சார் ஒரு உருட்டு ஒண்ண உருட்டுனாரு. நடக்க போறது தமிழக தேர்தல், அதை டெல்லிக்கான தேர்தல்ன்னு சொல்றார். பிரதமர் பதவிக்கா போட்டி போடறீங்க, உங்க லாஜிக் எங்களுக்கு புரியலை

தமிழக மக்கள் தெளிவானவங்க

தமிழ்நாட்டு மக்கள் தெளிவானவங்க, சூப்பர் கிளாரிட்டி அவர்களுக்கு தெரியும். உண்மையான எலக்ன்ஷ் தமிழ்நாட்டு மக்களுக்கும் ஊழலுக்கும் நடக்கிற போர், விஜய்க்கும் ஸ்டாலின் சாருக்கும் நடக்கிற போர். தூய சக்திக்கும், தீய சக்திக்கும் இடையே நடக்கிற போர் இது.

விஜயை எல்லோரும் எதிர்க்கிறாங்க

50 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கிற தேர்தல் இது. இந்த தேர்தலில் தான் ஒட்டு மொத்தமாக எல்லாருமா சேர்ந்து விஜயை எதிர்க்கிறாங்க. ஏன்னா விஜய் ஊழல், லஞ்சத்தை எதிர்ப்பதால், மக்கள் அவன் பக்கம் இருப்பதால், அவர்களுக்கு காண்டு. ஆனால் போட்டி இரண்டு பேருக்கு மட்டும் தான்

சிந்தித்து வாக்களியுங்க

தேர்தலில் இதுவரை ஓட்டு போட்டுவிட்டு மட்டும் வந்தீங்க, ஆனா இந்த தேர்தலில் உங்க விஜயா ஒவ்வொரு வீட்டிலும் நான் இருக்கிறேன். நீங்க வேட்பாளர்ன்னா, உங்க வீட்டில் இருக்கறவங்க ஓட்டு உங்களுக்குத்தானே.

எனக்கு எதிராக செய்யற ஒவ்வொரு செயலும், மக்களுக்கு எதிரானது என்பது அவர்களுக்கு தெரியாம போச்சு.

எங்க உறவு சென்சிட்டிவான சென்டிமெண்ட். என்னை யாரும் அசைக்க முடியாது. மக்களை நேசிக்கிற விஜய் வேண்டும், மக்கள் நம் பக்கம் நிற்கிறாங்க வெற்றி நிச்சயம்” இவ்வாறு விஜய் உரை நிகழ்த்தினார்.

============