NDA MPs conducted an inspection in Karur, offered condolences to the families of the deceased  
தமிழ்நாடு

கரூரில் NDA எம்பிக்கள் குழு: இனி நடக்கக் கூடாது, ஹேமமாலினி ஆதங்கம்

NDA MPs Visit Karur Stampede in TVK Campaign : 41 பேரை பலிகொண்ட கரூரில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் குழு நேரில் ஆய்வு நடத்தி, உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறியது.

Kannan

கரூர் துயரச் சம்பவம் :

NDA MPs Visit Karur Stampede in TVK Campaign : கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கடந்த சனிக்கிழமை நடத்திய பொதுக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு பெரும் துயரம் நிகழ்ந்தது. குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். பலியானோர் குடும்பத்திற்கு தமிழக அரசு, மத்திய அரசு, விஜய் சார்பில் நிவாரண உதவிகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.

தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் குழு :

இதனிடையே கரூர் சம்பவம்(Karur Stampede Incident) குறித்து நேரில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் 8 பேர் கொண்ட குழுவை பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா நியமித்தார். நடிகையும், பாஜக எம்பியுமான ஹேமமாலினி தலைமையிலான இக்குழுவினர் இன்று தமிழகம் வந்தனர்.

இனி இதுபோல நடக்கக் கூடாது :

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய ஹேமமாலினி, “ கரூரில் என்ன நடந்தது என்பதை விசாரிக்க வந்துள்ளோம். இதுபோன்ற நிகழ்வுகள் இனியும் நடக்கக் கூடாது. முதலில் உறவுகளை இழந்து தவித்து கொண்டிருக்கும் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க இருக்கிறோம். கரூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறோம். கரூர் மக்களிடமும் நடந்தது என்ன என்பதை கேட்டு அறிய இருக்கிறோம். கரூரில் ஆய்வு செய்தபின் பாஜக தேசிய தலைவர் நட்டாவிடம் அறிக்கை அளிப்போம்ர" என்று கூறினார்.

மேலும் படிக்க : Karur Tragedy : விசாரிக்க 8 பேர் கொண்ட NDA குழு : தலைமை ஹேமமாலினி

தேசிய ஜனநாயக கூட்டணி(NDA MP Hemamalini) எம்பிக்கள் குழுவில், ஹேமமாலினி எம்.பி. ஒருங்கிணைப்பாளராகவும், எம்.பி.க்கள் அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ் லால், ஸ்ரீகாந்த் ஷிண்டே (சிவசேனா), அப்ரஜிதா சாரங்கி, ரேகா சர்மா, புட்டா மகேஷ் குமார்(தெலுங்கு தேசம்) ஆகியோர் இடம் பெற்று இருக்கிறார்கள்.