TVK need 2 more seats to form government, next step depends on the decision take by VCK google
தமிழ்நாடு

”இன்னும் இரண்டு இடங்கள், திருமா கையில் துருப்புச்சீட்டு” : தள்ளிப்போகும் பதவியேற்பு! : என்ன செய்ய போகிறார் விஜய்...

தவெக ஆட்சி அமைக்க இன்னும் 2 இடங்கள் தேவைப்படும் நிலையில், விசிக எடுக்கும் முடிவை பொருத்தே அடுத்த கட்ட நகர்வு இருக்கிறது.

Kannan

பெரும்பான்மை இல்லாத தவெக

தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக தவெக இருந்தாலும், ஆட்சி அமைக்க இன்னும் 11 இடங்கள் தேவைப்பட்டது. விஜய் ஒரு தொகுதியை ராஜினாமா செய்வதால், 107 இடங்கள் மட்டுமே இருக்கும்.

கைகொடுத்த காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள்

திமுக கூட்டணியை முறித்துக் கொண்டு காங்கிரஸ் கைகொடுக்க, பலம் 112 ஆக உயர்ந்தது,. இரண்டு நாள் தொடர் பேச்சுவார்த்தைக்கு பிறகு, கம்யூனிஸ்ட் கட்சிகள் நிபந்தனையற்ற ஆதரவு தர முன்வந்து கடிதம் கொடுத்தன.

இன்னும் 2 இடம் தேவை

இரண்டு கட்சிகளுக்கும் தலா 2 இடங்கள் இருப்பதால், தவெக பலம் 116 ஆக உயர்ந்துள்ளது. 2 இடங்களில் வெற்றி பெற்ற ஐயூஎம்எல், தவெக ஆதரவு என்று தகவல் பரவிய நிலையில், பெரும்பான்மை கிடைத்து விட்டதாக கூறப்பட்டது.

ஆட்சி அமைக்க அழைப்பில்லை

ஆனால், மூன்றாவது முறையாக ஆளுநரை விஜய் சந்தித்து பேசிய போதும், ஆட்சி அமைக்க அழைப்பு ஏதும் விடுக்கப்படவில்லை. எனவே, இன்று நடைபெறுவதாக கூறப்பட்ட பதவியேற்பு விழாவும் தள்ளிப்போய் நிற்கிறது.

எதிர்பார்ப்பில் தமிழகம்

எனவே, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கையில் தான் துருப்புச் சீட்டு இருக்கிறது. தனது முடிவை இன்று அறிவிப்பதாக திருமாவளவன் தெரிவித்து இருப்பதால், அதை எதிர்பார்த்து தவெக மட்டுமின்றி, தமிழக மக்களும் காத்திருக்கிறார்கள்.

திருமா கையில் முடிவு

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, தவெகவை திருமா ஆதரிப்பாரா ? அல்லது ஆதரவு அளிக்க முடியாது என்று தெரிவிப்பாரா என்று தெரியவில்லை.

ஜனாதிபதி ஆட்சியா?

விசிக ஆதரவு தந்த முன் வந்தால், ஆளுநர் உடனடியாக ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார். அப்படி இல்லை எனில், ஜனாதிபதி ஆட்சியை தமிழகம் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

அதிமுக - திமுக கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பது இதுவரை புரளியாகவே இருக்கிறது. இது உண்மையாக வாய்ப்பில்லை என்பது தான் நிதர்சனம்

=====