Transport Minister Parthiban inaugurated the service of 26 new government city buses in Salem, featuring the color scheme of the TVK party flag.
புதிய அரசு பேருந்துகள் தொடக்கம்
சேலத்தில், சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் சார்பில் புதியதாக 26 நகர பேருந்துகளின் சேவையை போக்குவரத்து துறை அமைச்சர் பார்த்திபன் இன்று தொடங்கி வைத்தார்.
பேருந்துகளின் புதிய வர்ணம்
இந்த பேருந்துகள் அனைத்தும், வழக்கமான நீல நிறத்துக்கு மாற்றாக, தவெக கட்சி கொடியில் உள்ள மஞ்சள் மற்றும் சிவப்பு நிற வர்ணங்கள் பூசப்பட்டு புதிய வழித்தடங்களில் களம் இறக்கப்பட்டுள்ளன.
கடந்த கால நிற மாற்றங்கள்
கடந்த காலங்களில் அதிமுக ஆட்சியின் போது அரசு பேருந்துகளில் பச்சை வர்ணம் பூசப்பட்டு இயக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து திமுக ஆட்சி காலத்தில் அரசு பேருந்துகள் மஞ்சள் நிற வர்ணம் பூசப்பட்டு இயக்கப்பட்டன.
நீல நிறத்திலிருந்து மாற்றம்
புதிய ஆட்சி மாற்றங்களுக்கு ஏற்ப அரசு பேருந்துகளின் நிறங்களும் மாற்றப்பட்டு வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளில் நகரப் பேருந்துகள் யாவும் நீல வர்ணம் பூசப்பட்டு இயக்கப்பட்டு வந்தன.
பயணிகளின் கருத்து
தற்போது புதியதாக ஆட்சிக்கு வந்துள்ள தவெக அரசு சார்பில், போக்குவரத்துத் துறை அமைச்சரின் சொந்த மாவட்டமான சேலத்தில் தவெக கட்சி கொடியின் நிறத்தில் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் பெற்று சிறு சலசலப்பையும் ஏற்படுத்தி இருக்கு.
இதுகுறித்து, சேலத்தைச் சேர்ந்த சில பயணிகள் "கடந்த கால ஆட்சியாளர்களுக்கு தாங்கள் எவ்விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை இந்த பேருந்து நிறமாற்றம் உணர்த்துகிறது" என தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் காய்ச்சல் பரவல் அதிகரிப்பு: மருத்துவமனைக்கு வருவோர் முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!
=======