Tvk Perambur campaign rejected: Vijay complains in person to the election officer at the Secretariat google
தமிழ்நாடு

தவெகவின் பெரம்பூர் பிரச்சாரத்திற்கு மறுப்பு : தலைமை தேர்தல் அதிகாரியிடம் விஜய் நேரில் புகார்

தவெகவின் சார்பாக பெரம்பூர் பகுதியில் நடைபெற இருந்த பிரச்சாரத்திற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதை ,அடுத்து விஜய் தலைமை அதிகாரியை நேரில் சந்தித்து புகார் அளித்தார்

Rohini

பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு

வருகிற சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை பெரம்பூரில் நடத்துவதாக திட்டமிட்டிருந்த நிலையில் ,பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து பிரச்சாரத்திற்கு அனுமதியானது மறுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு

சென்னை தலைமை செயலகத்தில் இன்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை நேரில் சந்தித்து தவெக தலைவர் விஜய் இன்று மனு ஒன்றை அளித்தார்.

புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது

அவர் புகார் அளித்திருக்கும் மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது , அதிகாரிகள் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் , மேலும், தலைமைச் செயலாளர், சென்னை காவல் ஆணையர், ஏடிஜிபி, நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட 10 அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்றும் அவர் அந்த மனுவில் வலியுறுத்திருக்கிறார் விஜய்

மறுப்புகாண காரணங்களையும் குறிப்பிட்டுள்ள விஜய்

பெரம்பூர் பகுதியில் விஜய்யின் பரப்புரை பிரச்சாரத்திற்கு அனுமதியானது மறுக்கப்பட்டிருக்கும் நிலையில் ,அவர் மறுப்புக்கான காரணங்களையும் அவர் குறிபிட்டுள்ளார்.