மழையால் சென்னையில் பாதிப்பு
TVK Vijay Slams DMK on Rainwater Drainage System : டிட்வா புயல் காரணமாக, சென்னை, ராணிப்பேட்டை திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் 3 தினங்களாக பெய்து வரும் மழையால், தாழ்வான பகுதிகள் மழைநீர் சூழ்ந்து, வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது. இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
மக்களுக்கு பாதிப்பு - அரசே காரணம்
இது குறித்து விஜய் தனது எக்ஸ் தளத்தில், “சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வடிகால் வசதிகள் முறையாகவும் முழுமையாகவும் செய்து முடிக்கப்படாததே மக்களின் இந்தத் துயரத்திற்குக் காரணம்.
தவெகவினர் உதவ வேண்டுகோள்
பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.மழையால் பாதிப்பிற்கு உள்ளாகும் மக்களுக்குத் தேவையான உதவிகளைப் பாதுகாப்போடு செய்திட வேண்டும் என்று கட்சியினரைக் கேட்டுக் கொள்கிறேன்.
நான்கரை ஆண்டுகள் - திமுகவின் அலட்சியம்
மழைநீர் வடிகால் வசதியை ஏற்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்தும், நான்கரை ஆண்டுக்கால ஆட்சியில் பணிகள் முடிக்கப்படவில்லை. மக்கள் மீது சிறிதேனும் அக்கறையிருந்திருந்தால் கொஞ்சமாகப் பெய்த மழைக்கே இவ்வளவு தண்ணீர் தேங்கியிருக்காது.
விழித்துக் கொள்ளுமா தமிழக அரசு?
மீதமுள்ள பருவமழைக் காலத்திலாவது மக்கள் சிரமத்திற்கு உள்ளாகாத வகையிலும், அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையிலும் மழைநீர் வெளியேறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்” இவ்வாறு தவெக தலைவர் விஜய் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
===============