TVK Vijay 2nd Maanadu in Madurai https://x.com/Tvk_ITWING
தமிழ்நாடு

மதுரையில் 2வது மாநில மாநாடு : ’வெற்றி நிச்சயம்’ என விஜய் சூளுரை

TVK Vijay 2nd Maanadu in Madurai : ஆகஸ்டு 25ம் தேதி மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு நடத்தப்படும் என, அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்து இருக்கிறார்.

Kannan

தமிழக வெற்றிக் கழகம் :

TVK Vijay 2nd Maanadu in Madurai : தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய நடிகர் விஜய், முதல் மாநில மாநாட்டை கடந்த ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் வெற்றிகரமா நடத்திக் காட்டினார். அதைத்தொடர்ந்து, உறுப்பினர்கள் சேர்க்கை, நிர்வாகிகள் நியமனம், கட்சியின் பொதுக்குழு, செயற்குழு கூட்டங்கள் என அரசியல் செயல்பாடுகள் அவர் முன்னெடுத்து வருகிறார்.

திமுக, பாஜகவை எதிர்க்கும் விஜய் :

மத்தியில் பாஜக அரசு, மாநிலத்தில் திமுக அரசை கடுமையாக விமர்சித்து எதிர்த்து வரும் தமிழக வெற்றிக் கழகம்(Tamilaga Vettri Kazhagam), முதல்வர் வேட்பாளர் விஜய் என்ற முழக்கத்துடன் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகிறது. இப்போதைக்கு அதிமுகவுடன் கூட்டணி என்ற நிலைப்பாட்டில் அந்தக் கட்சி இருந்தாலும், தேர்தலுக்கு முன்பு இது எப்படி வேண்டுமானாலும் மாற வாய்ப்பு உள்ளது.

மதுரையில் 2வது மாநில மாநாடு :

இந்தநிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, மதுரையில் 2வது மாநில மாநாட்டை(TVK Madurai Maanadu 2025) நடத்த விஜய் முடிவு செய்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தவெகவின் இரண்டாவது மாநில மாநாடு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி, 2025 மதுரையில்(TVK Madurai Manadu Date) நடைபெறும்.

வாகை சூடும் வரலாறு திரும்பட்டும் :

என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் வணக்கம். தமிழக அரசியல் களத்தின் முதன்மை சக்தியான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு(TVK Vijay Conference in Madurai), வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி (25.08.2025) திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்கிறேன். வாகை சூடும் வரலாறு திரும்பட்டும். வெற்றி நிச்சயம் ‘” இவ்வாறு விஜய் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க : எல்லோருக்கும் சாரி சொல்லுங்க ‘சிஎம். சார்’ : த.வெ.க விஜய் யோசனை

பாரப்பத்தி பகுதியில் மாநாடு :

மதுரை பாரப்பத்தி(Paraipatti) பகுதியில் 237 ஏக்கர் பரப்பளவில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு(TVK Madurai Maanadu Place), அதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. வாகன பார்க்கிங்க்கு 217 ஏக்கர் ஒதுக்கப்பட்டு மாநாடுக்கு தயார் செய்யப்பட்டு வருகிறது. மாநாடு நடத்துவதற்காக இன்று பந்தகால் நடப்பட்டது.

அரசியல் செல்வாக்கு, ஆழம் பார்க்கும் விஜய் :

தென் மாவட்டங்களில் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் 2வது மாநில மாநாட்டை மதுரையில் விஜய்(Vijay Madurai Maanadu) நடத்துகிறார் எனக் கூறப்படுகிறது. முதல்வர் ஸ்டாலினின் ரோடு ஷோ, உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்ற கூட்டம், முருக பக்தர்கள் மாநாடு என மதுரை களை கட்டிய நிலையில், அடுத்து தவெகவின் மாநாடு அரசியல் முக்கித்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

====