TVK Vijay Election Campaign Salem Date Update TN Police Denied Permission for Vijay to Public Meeting on December 4 2025 Google
தமிழ்நாடு

சேலத்தில் விஜய் பரப்புரைக்கு அனுமதி மறுப்பு : காவல்துறை விளக்கம்

TVK Vijay Election Campaign in Salem Date Update in Tamil : சேலத்தில் டிசம்பர் 4ம் தேதி விஜய் பிரசாரம் செய்ய காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

Kannan

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026

TVK Vijay Election Campaign in Salem Date Update in Tamil : தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு 6 மாதங்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் மக்களை சந்திக்கும் நிகழ்ச்சிகள் மூலம் பரப்புரை செய்து வருகின்றன.

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருப்பதால், இந்தப் பிரசாரம் தற்காலிகமாக தடைபட்டு இருக்கிறது. அடுத்த மாதம் மீண்டும் சுற்றுப் பயணத்தை தீவிரப்படுத்த தலைவர்கள் முடிவு செய்து இருக்கிறார்கள்.

மக்களை சந்திக்கும் பயணம்

வாரந்தோறும் சனிக்கிழமைகளில் தவெக தலைவர் விஜய் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். கரூர் வேலுசாமிபுரத்தில் செப்டம்பர் 27ம் தேதி விஜய் கலந்து கொண்ட பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்(Karur Stampede Death) உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கிய நிலையில், சுற்றுப்பயணத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார் விஜய். 2 மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் அவர் மக்களை சந்திக்க முடிவு செய்து இருக்கிறார்.

சேலம் பரப்புரை - விஜய் கடிதம்

அதற்காக டிசம்பர் 4ம் தேதி சேலத்தில் பரப்புரை செய்ய அனுமதி கேட்டு சேலம் மாநகர காவல்துறைக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கடிதம் அனுப்பி கோரிக்கை விடுக்கப்பட்டது. சேலத்தில் மூன்று இடங்களை குறிப்பிட்டு ஏதாவது ஒரு இடத்தில் பிரசாரம் செய்ய அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

2026ஆனால் இந்த அனுமதியை வழங்க காவல்துறை மறுத்து இருக்கிறது. இது தொடர்பாக தவெக நிர்வாகிகளுக்கு காவல்துறை அனுப்பி இருக்கும் பதில் கடிதத்தில், காரணங்கள் விளக்கப்பட்டுள்ளன.

  • டிசம்பர் நான்காம் தேதி காவல்துறையினர் அதிகளவில் வெளி மாவட்ட பாதுகாப்பு படைக்கு செல்வதால் தங்களின் கட்சி நிகழ்ச்சிக்கு தேவையான அளவில் காவலர்களை நியமிக்க இயலாது.

  • விஜய் மக்களை சந்திக்கும் இடத்தில் எத்தனை நபர்கள் கலந்து கொள்வார்கள் என்ற விவரம் மனுவில் தெரிவிக்கப்படவில்லை.

  • சேலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து எவ்வளவு பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என்றும் குறிப்பிடப்படவில்லை.

  • எந்தெந்த மாவட்டத்தில் இருந்து எவ்வளவு பேர் பங்கேற்பார்கள் என்கிற விவரம் இல்லை என்பதால் தங்களின் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க இயலாது.

என்று காவல்துறை அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 3ம் தேதி கார்த்திகை தீபத் திருவிழாவுக்காக திருவண்ணாமலைக்கு காவலர்கள் பாதுகாப்பு பணிக்காக செல்கின்றனர். இதுதான் முக்கிய காரணம் என்று சேலம் மாநகர காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நான்கு வாரங்களுக்கு முன்பு மனு

இனிவரும் காலங்களில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு மனு அளிக்கும் பட்சத்தில் நிகழ்ச்சி நடக்கும் தேதியில் இருந்து 4 வாரங்களுக்கு முன்னதாக மனு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

எனவே, மேற்கண்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்து மீண்டும் மனு அளிக்கும் பட்சத்தில் காவல்துறை அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுத்து தகுந்த பாதுகாப்பு அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

====