சிறப்பு பொதுக்குழுவில் விஜய்
TVK Vijay About TVK vs DMK in TN Assembly Elections 2026 : மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் விஜய், ”முதல்வர் ஸ்டாலினிடம் பேச்சில் மட்டும் தான் மனிதாபிமானம் உள்ளது. ஆனால் செயலில் இல்லை. 1972க்கு பிறகு கேள்வி கேட்க யாரும் இல்லாததால் திமுக தலைமை இப்படி மாறி விட்டது.
திணறிய வழக்கறிஞர்கள்
கரூர் சம்பவம் தொடர்பா உச்ச நீதிமன்றம் எழுப்பிய விவாதங்களை, முதல்வர் ஸ்டாலினுக்கு கேள்வியா முன்வைக்கிறேன். விவாதத்தின் போது திமுக தரப்பு வழக்கறிஞர்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திக்கி திணறினார்கள் இது முதல்வருக்கு மறந்து விட்டதா?
கேள்வி எழுப்பிய தமிழக மக்கள்
கரூர் சம்பவத்துக்கு அப்புறமே அவசர அவசரமா ஒரு தனிநபர் ஆணையம், ஒரு செய்தியாளர்கள் சந்திப்பு, அவசர அவசரமா இதெல்லாம் ஏன் நடக்குது? எதுக்காக நடக்குது என ஒட்டுமொத்த தமிழக மக்களும் கேள்வி கேட்க ஆரம்பிச்சாங்க. இதையும் முதல்வர் மறந்துட்டாரா?
ஒரு 50 வருஷமா பொது வாழ்க்கையில் இருக்கிற ஒருத்தரு, ஒரு முதல்வர் சொன்னது எவ்வளவு பெரிய ஒரு வடிகட்டின பொய். சப்பை கட்டு.
தமிழக அரசுக்கு நீதிமன்றம் குட்டு
காவல் உயர் அதிகாரிகள் ஊடகங்கள் இடம் பேசியது பொதுமக்களிடையே நியாயமான விசாரணை நடக்குமா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்த கூடும் என்றும் நியாயமான விசாரணை மூலமே அந்த சந்தேகத்தை மீட்டெடுத்தே ஆக வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் தலையில் ஓங்கி நறுக்கு நறுக் நறுக்கென என்று கொட்டியதை முதல்வர் அவர்கள் மறந்துவிட்டாரா?
SIT - உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி
எந்த ஆவணத்தின் அடிப்படையில் அந்த உத்தரவு அமைக்கப்பட்டது? நான் கேட்கல. உச்சநீதிமன்றம் கேட்டு இருக்காங்க. நீதிமன்றம் உரத்த குரலில் கேள்வி கேட்டது. அப்போதும் கூட உச்ச நீதிமன்றத்தில் திமுக அரசுக்காக வாதாடிய அறிவார்ந்த மூத்த வழக்கறிஞர்கள் பதில் சொல்ல இயலாமல் வாய் மூடி மௌனம் காத்ததை நாடே பார்த்ததல்லவா?
2026ல் மக்கள் பாடம் புகட்டுவாங்க
மக்களுக்கு திமுக அரசு மீதான நம்பிக்கை மொத்தமாக மண்ணுக்குள் புதைந்து விட்டது. இதுவாவது முதல்வர் அவர்களுக்கு புரியுதா? புரியலைன்னா 2026 தேர்தல்ல இந்த திமுக தலைமைக்கு மக்கள் இன்னும் ஆழமா அழுத்தமா புரிய வைப்பாங்க. அப்ப கூட இவங்க என்ன பண்ணுவாங்க தெரியும்ல. அஞ்சு வருஷத்துக்கு ஒரு வாட்டி பழக்க தோஷத்தில் ஒரு அறிக்கை ஒன்னு வெளியிடுவாங்களே. மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம் அப்படின்னு. அந்த அறிக்கை வெளியிட்டு போய் அறிவாலயத்துக்குள்ள ஓடி ஒளிஞ்சுக்குவாங்க.
மக்கள் நம் பக்கம்தான்
இயற்கையும், இறைவனும் நம் தமிழக சொந்தங்களின் வடிவில் மாபெரும் மக்கள் சக்தியை நம்ம கூடவே நிக்கும் போது என் மக்களுக்கான அரசியலை தடுப்பவர் யார்? தோழர்களே நமக்கு வந்திருக்கிற இந்த இடையூறு வெறும் டெம்ப்ரவரி மட்டும்தான். எல்லாத்தையும் தகர்த்தெறிவோம். மக்களுடன் கைகோர்த்து நிற்போம். மக்களுடைய களத்துல போய் நிற்போம்.
தவெக - திமுக நேரடி போட்டி
நம்ம பயணத்தில் தடம் மாறவே மாட்டோம். இப்பவும் சொல்றேன் 2026ல ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவுல தான் போட்டி. இன்னும் ஸ்ட்ராங்கா மாற போகுது. 100 சதவீதம் வெற்றி நமக்கே. வாகை சூடுவோம் வரலாறு படைப்போம்’’ இவ்வாறு விஜய் பேசினார்.
======================