தவெகவின் முதல் பட்ஜெட் தாக்கல்
தமிழகத்தில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றிகழகத்தின் முதல் தமிழ்நாடு நிதி நிலை அறிக்கை வரும் 5ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
இதற்கான பணிகள்தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையிம், புதிதாக ஆட்சி அமைத்திருக்கும் அரசு என்பதால் பொதுமக்களிடம் மிகுந்த எதிர்ப்பார்ப்பானது நிலவியுள்ளது
கல்வியில் குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்ப்பு
அரசுப் பள்ளியில் படித்துவிட்டு கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு ரூ. 8,000, விவசாயிகளின் குழந்தைகளுக்கு கட்டணமில்லா உயர் கல்வி ஆகிய திட்டங்களை முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு தாக்கல் செய்ய இருக்கும் பட்ஜெட்டில் அறிவிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
7.5% இட ஒதுக்கீடு 10% ஆக உயர்வு
வரும் பட்ஜெட்டில் ,இரண்டு ஏக்கருக்கும் குறைவாக விவசாய நிலம் வைத்துள்ள விவசாயிகளின் குழந்தைகளுக்கு கட்டணமில்லா உயர் கல்வி வழங்க முடிவு செய்து அதற்கான அறிவிப்பை பட்ஜெட்டில் வெளியிடவும்,
இளங்கலை பட்டப் படிப்பிலும், முதுகலை பட்ட படிப்பிலும் அரசு பள்ளி மாணவர்களுக்காக வழங்கப்படும் 7.5% இட ஒதுக்கீடு 10% ஆக அதிகரித்து அறிவிக்கப்படவும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிணையில்லா கல்வி கடன் வழங்க திட்டம்
பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனங்களை மாநில அரசை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளவும், பட்டப்படிப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை மாணவர்களுக்கு பிணையில்லாமல் 20 லட்சம் ரூபாய் வரை கல்விக்கடன் வழங்கவும் திட்டமிட்டிருப்பதாக தகவ்ல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது
அரசு கல்லூரிகளின் தரத்தை உயர்தத முடிவு
அதன்படி ,அரசு தொழிற் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் புதிதாக ஐந்து பொறியியல் கல்லூரிகள் தொடங்கவும், 30 அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரிகள் தன்னாட்சி கல்லூரிகளாக மாற்றவது தொடர்பாகவும் அறிவிப்பு வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
ஏஐ படிப்பிற்க்கென தனி பல்கலைகழகம் அமைக்க திட்டம்
தவெகவின் தேரத்ல் பரப்புரையின் போதே ,யற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங், பயோடெக், காலநிலை தொழில்நுட்பம், விண்வெளி தொழில்நுட்பம்,
சைபர் செக்யூரிட்டி உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ற வகையில் பெரியார் இன்ஸ்டிடியூட் ஆப் எமர்ஜிங் டெக்னாலஜி பல்கலைக்கழகம் உருவாக்கவும் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறாக வரும் பட்ஜெட்டிலொ கல்விக்கென்று முக்கியனானஅறிவிப்புகள் வெளியாகவும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது
==================