The Political Journey of TVK: An Overview—From the Party's Inception to the Seizure of Power! source:google,instagram
தமிழ்நாடு

TVK VIJAY : "தவெகவின் அரசியல் பயணம்" : கட்சித் தொடக்கம் முதல் ஆட்சி அதிகாரம் வரை! : ஒரு பார்வை!

நடிகர் விஜய் தலைமையில் உருவெடுத்த தவெக, மக்கள் ஆதரவுடன் ஆட்சிக் கட்டிலில் அமர்வது வரையிலான அதன் வரலாற்றுச் சுவடுகள் ஒரு பார்வை.

Kavitha prasanna

The Political Journey of TVK: An Overview—From the Party's Inception to the Seizure of Power!

தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைத்துள்ள விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தனது குறுகிய கால அரசியல் பயணத்தில் எட்டியுள்ள மைல்கற்கள் வியக்கத்தக்கவை.

நடிகர் விஜய் தலைமையில் உருவெடுத்த இக்கட்சி, மக்கள் ஆதரவுடன் ஆட்சிக் கட்டிலில் அமர்வது வரையிலான அதன் வரலாற்றுச் சுவடுகள் ஒரு பார்வை.

அரசியல் அஸ்திவாரம் மற்றும் வளர்ச்சி

தவெக கட்சித் தொடக்கம்: பிப்ரவரி 02, 2024 அன்று தவெக அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது.

உறுப்பினர்கள் சேர்க்கை: மார்ச் 08, 2024 முதல் கட்சிக்கான உறுப்பினர் சேர்க்கை பணிகள் துவங்கின.

தவெக அடையாளம்: ஆகஸ்ட் 22, 2024 அன்று கட்சியின் கொடி அறிமுகம் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, அக்டோபர் 27, 2024-ல் கட்சியின் முதல் மாநில மாநாடு எழுச்சியுடன் நடைபெற்றது.

மக்கள் போராட்டங்களும் களப்பணிகளும்

தவெக தனது அரசியல் பயணத்தில் மக்களின் பிரச்சனைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தது.

  • ஜனவரி 20, 2025 அன்று பரந்தூர் மக்கள் சந்திப்பு நிகழ்வை தவெக தலைவர் விஜய் ஒருங்கிணைத்தார்.

  • ஜூலை 13, 2025 அன்று காவல் மரணங்களுக்கு எதிராகப் பெரும் போராட்டத்தை தவெக தலைவர் விஜய் முன்னெடுத்தார்.

  • செப்டம்பர் 13, 2025 அன்று திருச்சியில் இருந்து தனது மக்கள் சந்திப்புப் பயணத்தை அவர் தொடங்கினார்.

  • செப்டம்பர் 27 கரூர் துயர நிகழ்வு.

  • நவம்பர் 5 ஆம் தேதி தவெகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்

தேர்தல் களம் மற்றும் வெற்றி

கட்சி சின்னம்: ஜனவரி 22, 2026 அன்று தவெக-வுக்கு 'விசில்' சின்னம் ஒதுக்கப்பட்டது.

வேட்பாளர் அறிமுகம்: மார்ச் 29, 2026 அன்று ஒரே மேடையில் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் விஜய் அறிமுகப்படுத்தினார்.

பரப்புரை: மார்ச் 30, 2026 அன்று பெரம்பூரில் இருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய விஜய், ஏப்ரல் 16 அன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

சட்டமன்ற முடிவுகள்: மே 04, 2026 அன்று வெளியான தேர்தல் முடிவுகளில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இருபெரும் கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி, 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தவெக ஆட்சியமைக்கும் தகுதியைப் பெற்றுள்ளது.