Two-day training camp for 17th Legislative Assembly members: Chief Minister Vijay inaugurates it!
இரண்டு நாள் பயிற்சி முகாம்
தமிழகச் சட்டமன்ற பேரவை உறுப்பினர்களுக்கான பிரத்யேக 2 நாள் பயிற்சி முகாமை தமிழக முதல்வர் விஜய், இன்று (ஜூன் 16) குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
கலைவாணர் அரங்கில் எம்.எல்.ஏக்களுக்கு பயிற்சி
தமிழகத்தின் 17-ஆவது சட்டமன்ற பேரவைக்கு தேர்வாகியுள்ள அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்குமான இந்த இரண்டு நாள் பயிற்சி முகாம் சென்னை, கலைவாணர் அரங்கத்தில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. தினசரி காலை 10:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை இப்பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
பயிற்சியின் முக்கிய நோக்கங்கள்
சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவை நிகழ்வுகளின் போது கடைப்பிடிக்க வேண்டிய மரபுகள் என்னென்ன மற்றும் விதிமுறைகள் என்னென்ன என்பது குறித்து விளக்கும் நோக்கில் இப்பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விதிமுறைகள் கற்றல்
பேரவையில் உறுப்பினர்கள் கடைப்பிடிக்க வேண்டிய cm vijayமாண்புகள், நடைமுறைகள் மற்றும் விதிகள் குறித்து அரசுத் துறை செயலாளர்கள் மற்றும் துறை வல்லுநர்கள் மூலம் விரிவான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
பேச்சுரிமை மற்றும் வரம்புகள்
அவையில் எந்தெந்த விவகாரங்கள் குறித்துப் பேசுவதற்கு அனுமதி உள்ளது, எவற்றையெல்லாம் பேசக் கூடாது என்பது குறித்த தெளிவான விளக்கங்கள் வழங்கப்படுகின்றன.
கேள்வி எழுப்பும் நடைமுறை
மக்கள் பிரச்சனைகளை அவையின் கவனத்திற்குக் கொண்டு வரும் வகையில், கேள்விகளை எழுப்புவதற்கான முறையான வழிமுறைகள் மற்றும் நடைமுறைகள் பற்றி முழுமையான பயிற்சிகள் கற்றுத்தரப்படுகின்றன.
எனினும் இந்த முகாமில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் அவசியமாகப் பங்கேற்க வேண்டும் என்று முன்னதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மூத்த உறுப்பினர்களின் அனுபவப் பகிர்வு
இப்பயிற்சி முகாமில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மூத்த உறுப்பினர்கள் விருப்பப்பட்டால் பங்கெடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் தங்களது நீண்டகால நாடாளுமன்ற/சட்டமன்ற அனுபவங்களைப் புதிய உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் முழுமையாக நிறைவடைந்த பின்னர், முறைப்படி 'சட்டப்பேரவைக் குழுக்கள்' அமைக்கப்படும் என்று பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார்.
தவெக உறுப்பினர்களுக்குக் கட்டாயம்
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டு முதன்முறையாக வெற்றி பெற்றுள்ள சட்டமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் பேரவைக்கு முற்றிலும் புதியவர்கள் ஆவர்.
இதனால், அவையின் செயல்பாடுகளை அவர்கள் முழுமையாக கற்றுக்கொள்ளும் பொருட்டு, தவெக எம்.எல்.ஏ-க்களுக்கு இந்த 2 நாள் பயிற்சி முகாம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
=====