Two songs from the movie 'Ram-Leela' have already been released and have received a good reception from fans.
நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள வீடுகளில் விஷமற்ற, ரசாயனமற்ற காய்கறி உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்திலும் , பெண்களின் பொருளாதார தன்னிறைவு மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கத்திலும் தமிழக அரசு ‘வெற்றி இல்லத்தரசி’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்த அறிவிப்பை வேளாந்துறை அமைச்சர் வினோத் இன்று வேளாண் பட்ஜெட் தாக்களின் போது வெளியிட்டு அதற்கான பட்ஜெட் தொகை என ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
இத்திட்டத்தின் முதன்மை நோக்கம்?
மாடித் தோட்டம் மற்றும் வீட்டுத் தோட்டம் அமைப்பதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றுவதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள் மற்றும் வழங்கப்படும் வசதிகள் பின்வருமாறு:
காய்கறி மற்றும் பழச்செடித் தொகுப்புகள்
வீடுகளிலேயே அன்றாட தேவைக்குத் தேவையான காய்கறிகள் மற்றும் பழங்களை அவர்களே வளர்ப்பதற்கு ஏற்ற உயர்தர விதை மற்றும் செடித் தொகுப்புகள் வழங்கப்படும்.
இடுபொருள் தொகுப்புகள்
செடிகள் ஆரோக்கியமாக வளர்வதற்கு தேவையான இயற்கை உரங்கள், தென்னை நார் கழிவு கட்டிகள், உயிர் உரங்கள் மற்றும் பூச்சி விரட்டித் தொகுப்புகள் பயனாளிகளுக்கு வழங்கப்படும்.
செங்குத்து தோட்டம்
குறைந்த இடம் வசதி கொண்ட நகரத்துப் வீடுகளுக்கு ஏற்ற வகையில், குறைந்த இடத்தில் அதிக செடிகளை வளர்க்க உதவும் ‘செங்குத்துத் தோட்டம்’ அமைக்கும் வசதி ஊக்கப்படுத்தப்படும்.
நிழல்வலைக் குடில்கள்
கடும் வெயிலில் இருந்து செடிகளைப் பாதுகாக்கவும், தடையின்றி செடிகள் வளரவும் நிழல்வலைக் குடில்கள் அமைப்பதற்கான உதவிகள் வழங்கப்படும்.
நீரியல் தோட்டம்
மண் இல்லாமலேயே வெறும் தண்ணீரை மட்டும் பயன்படுத்தி பயிர்களை வளர்க்கும் நவீன 'ஹைட்ரோபோனிக்ஸ்' தொழிலும் இத்திட்டத்தின் கீழ் ஊக்குவிக்கப்படும்.
நிதி ஒதுக்கீடு மற்றும் அமலாக்கம்
இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவாக செயல்படுத்துவதற்காக தமிழக வேளாண் பட்ஜெட்டில் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதன்மையாக இல்லத்தரசிகள் மற்றும் மாடித் தோட்டம் அமைக்க விருப்பமுள்ள நகர்ப்புற ,மற்றும் கிராமப்புற குடும்பங்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுவர்.
இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் நன்மைகள்
வீடுகளிலேயே நஞ்சற்ற பசுமையான காய்கறிகளை உற்பத்தி செய்ய முடிவதால் குடும்பத்தின் ஆரோக்கியம் மேம்படும். மேலும் அன்றாட காய்கறி தேவைகளுக்கான செலவு கணிசமாகக் குறையும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு
முக்கியமாக வீடுகளில் உள்ள கழிவுநீரைச் சரியாகப் பயன்படுத்தவும், நகரங்களில் பசுமைப் பரப்பை அதிகரிக்கவும் இது வழிவகுக்கும்.
=====