Udhayanidhi's asset details discrepancy in nomination: Notice to Income Tax Department to investigate,  google
தமிழ்நாடு

உதயநிதி வேட்பு மனுவில் சொத்து விவரம் முரண்பாடு : வருமான வரித்துறை விசாரிக்க உத்தரவு : ஏப்ரல் 20 விசாரணை!

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் உதயநிதி குறிப்பிட்டுள்ள வேட்புமனுவில் சொத்து விவரங்களில் முரண்பாடு இருப்பதாக கூறி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது

Rohini

வருமான வரித்துறை விசாரிக்க நோட்டீஸ்

வருகிற சட்டமன்ற தேர்தலில் சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் உதயநிதி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் சொத்து விவரங்கள் தொடர்பான அனைத்தும் முரண்பட்டதாக இருப்பதாக கூறி சேப்​பாக்​கம் - திரு​வல்​லிக்​கேணி தொகுதி வாக்​காள​ரான குமார​வேல் என்​பவர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தி்ல வழக்கு தொடர்ந்திருந்தார்

தாக்கல் செய்யப்பட்ட மனு

இதுதொடர்​பாக அவர் தாக்​கல் செய்​துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது ,உதயநிதி ஸ்டா​லின் 2021-ல் தாக்​கல் செய்​திருந்த வேட்​பு மனு​வில் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறு​வனத்​தில் ரூ.7.36 கோடி முதலீடு செய்​திருந்​த​தாக குறிப்​பிட்டு இருந்​தார்.

ஆனால், தற்​போதைய தேர்​தல் மனு​வில் அந்த விவரங்​கள் குறித்து எந்த தகவலும் தெரிவிக்​கப்​பட​வில்​லை.

மாறாக, அவரது மனைவி ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறு​வனத்​தில் ரூ. 2.63 கோடி முதலீடு செய்​துள்​ள​தாக குறிப்​பிடப்​பட்​டுள்​ளது.

முறையான விளக்கம் இல்லை

இந்த பரிவர்த்​தனை தொடர்​பாக முறை​யான விளக்​கங்​கள் வேட்​புமனு​வில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும் கடந்த 2021-ல் தாக்​கல் செய்​திருந்த வேட்​புமனு​வில் உதயநிதி ரூ. 11.6 கோடி ஸ்னோ ஹவுஸிங் என்ற நிறு​வனத்​துக்கு கடன்கொடுத்​துள்​ள​தாக கூறி​யுள்ளார்.

ஆனால், தற்​போது ரூ. 10 கோடி கடன் கொடுத்​துள்​ள​தாக குறிப்​பிட்​டுள்​ளார். எஞ்​சிய ரூ. 1 கோடியே 6 லட்​சம் பணம் திருப்பி செலுத்​தப்​பட்டு வி்ட்​டதா என்ற விவர​மும் தெரி​விக்​கப்​பட​வில்​லை என்றும் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்

சொத்து முரண்பாடு

மேலும் அவர் வேட்புமனுவில் 2020-ம் ஆண்​டுக்கு முன்​பாக தனக்கு ரூ. 2 கோடி அளவுக்கு வரு​மானம் உள்​ள​தாக குறிப்பிட்டுயிருக்கிறார்.

ஆனால், தற்​போது ரூ. 10.98 கோடி அளவுக்கு வரு​மானம் உயர்ந்​துள்​ள​தாக தெரி​வித்​துள்​ளார்.

வரு​மானம் மற்​றும் சொத்து அதி​கரிப்​புக்கு உரிய விளக்​கம் அளிக்​கப்​பட​வில்​லை. தனக்​குள்ள சொத்​துகள் குறித்து முரண்​பா​டான தகவல்​களை வேட்​பாளர்​கள் வேட்​புமனு​வில் தெரி​விப்​பது மக்​கள் பிர​தி​நி​தித்​துவ சட்​டத்​துக்கு எதி​ரானது என்று அந்த மனுவில் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்

வருமான வரித்துைறை விசாரணை செய்ய உத்தரவு

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நநீதிமன்ற நீதிபதி அமர்வு , சொத்து முரண்பாடு தொடர்பாக உயர்நீதிமன்றம் , வருமான வரித்துறை இதனை விசாரித்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

ஏப்ரல் 20 ல் மறுவிசாரணை

இந்த சொத்து ,முரணப்பாடு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது ஏப்ரல் 20 ல் மறுவிசாரணை செய்யப்படும் என்று கூறி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

=======