Union Minister L. Murugan announces 4 new trains for Tamil Nadu:
தமிழக மக்களின் நீண்டநாள் கோரிக்கை
தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருப்பது, தமிழகத்திற்கு புதிய ரயில் சேவைகள், கூடுதல் நிறுத்தங்கள், மேலும் தற்போதைய ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பது தான்.
மத்திய அரசு ஒப்புதல்
தற்போது மத்திய அமைச்சரவை தமிழக மக்களின் நீண்டகால கோரிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய இணை அமைச்சர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில்,
சமீபத்தில், தமிழகத்திற்குத் தேவையான கூடுதல் ரயில்களை இயக்குவது குறித்தும், சில ரயில்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் கூடுதல் நிறுத்தங்களை அறிவிப்பது தொடர்பாகவும், மாண்புமிகு மத்திய இரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்களை நேரில் சந்தித்து வேண்டுகோள் வைத்திருந்தேன்.
அதன்படி 4 புதிய ரயில்கள்
1) பாலக்காடு- பொள்ளாச்சி MEMU (மின்சாரப் பயணிகள் ரயில்கள்)
2) மயிலாடுதுறை- காரைக்குடி பயணிகள் இரயில்
3) போத்தனூர்- தன்பாத் அம்ரித் பாரத் விரைவு இரயில்
4) திருநெல்வேலி- மங்களூரு விரைவு இரயில், ஆகிய நான்கு புதிய இரயில்கள் இயக்கப்படவுள்ளன.
மேலும் கூடுதல் நிறுத்தங்கள்
1) மங்களூரு சென்ட்ரல்- ராமேஸ்வரம் விரைவு இரயில் திரூர், உடுமலைப்பேட்டை, பரமக்குடி ஆகிய இரயில் நிலையங்களில் நின்று செல்லும்
2) தாம்பரம்- ராமேஸ்வரம் விரைவு இரயில் பண்ருட்டி இரயில் நிலையத்தில் நின்று செல்லும்.
மேலும் ரயில் சேவைகளின் எண்ணிக்கை உயர்வு
1) திருச்சி- காரைக்குடி பயணிகள் இரயில், வாரத்தில் அனைத்து நாட்களும் இயக்கப்படும்.
2) எம்ஜிஆர் சென்ட்ரல்- போடி விரைவு இரயில் வாரத்திற்கு 6 நாட்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மற்றும் ரயில்வே துறை அமைச்சருக்கு நன்றி
தமிழக மக்களின் நலனுக்காக கூடுதல் இரயில்களை இயக்க நடவடிக்கை எடுத்துள்ள நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய இரயில்வே துறை அமைச்சர் திரு. அஷ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கும் தமிழக மக்களின் சார்பில் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
மத்திய அமைச்சர் எல். முருகனின் இந்த அறிவிப்பு தமிழக ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக உள்ளது.