UPI Transactions: Charges likely for amounts exceeding ₹2,000; Central Government reportedly considering google
தமிழ்நாடு

யுபிஐ பரிவர்த்தனை : ரூ.2,000+ மேல் இருந்தால் கட்டணம் வசூலிக்க, மத்திய அரசு பரிசீலனை..!

யுபிஐ மூலம் ரூ.2,000-க்கு மேல் மேற்​கொள்​ளப்​படும் வணி​கப் பரிவர்த்​தனை​களுக்கு 0.25% முதல் 0.4% வரை கட்​ட​ணம் வசூலிக்க மத்திய அரசு அனுமதிக்க கூடும் நிலை இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

Rohini

ரூ.2,000-க்கு மேலான் யுபிஐ பரிவர்தனை, கட்டணம் வசூலிக்கபடும்

யுபிஐ மூலம் ரூ.2,000-க்கு மேல் வணி​கப் பரிவர்த்​தனை​ மேற்கொண்டால் 0.25% முதல் 0.4% வரை கட்​ட​ணம் (எம்​டிஆர் - வணி​கர் தள்​ளு​படி வீதம் ) விதிக்க மத்​திய அரசு அனுமதி அளிக்​கக்​கூடும் என தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன.

மத்திய அரசின் தகவல் கூறுவது என்ன

மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் நாடாளு​மன்​றத்​தில் தாக்​கல் செய்த வரி விதிப்பு மற்​றும் பிற சட்​டங்​கள் (திருத்த) மசோ​தா​வில் வங்​கி​களும் சேவை நிறு​வனங்​களும் மின்​னணு பரிவர்த்​தனை​களுக்கு கட்​ட​ணம் வசூலிப்​ப​தற்​கான தடையை நீக்க நாடாளுமன்றத்தில் முன்மொழிந்த்தாகவும் ,

இதையடுத்​து, ரூ.2,000-க்கு மேலான யுபிஐ பரிவர்த்​தனை​களுக்கு 0.25% முதல் 0.4% வரை கட்​ட​ணம் விதிக்க வாய்ப்​புள்​ள​தாக கூறப்​படு​கிறது.

அன்றாட சிறு செலவுகள் இதனால் பாதிக்கப்படாது

இந்த அறிவிப்பு குறித்து குறித்து அதிகாரிகள் கூறும்போது ரூ.2,000-க்கு உட்​பட்ட பரிவர்த்​தனைகளுக்​குக் இந்த கட்​ட​ணம் இல்​லை என்றும் இதனால் காய்​கறி, பால், மளிகைப் பொருட்​கள் வாங்​கு​வது மற்​றும் ஆட்​டோ, டாக்சி கட்டணம் செலுத்​து​வது போன்ற அன்​றாட சிறு செல​வுகளில் பாதிப்பு ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளனர்

எனவே, 95% பரிவர்த்​தனை​கள் இந்த கட்டண வரம்​பிற்​குள் வராது. மேலும், வணி​கர்​கள் இந்​தக் கட்டணத்தை வாடிக்​கை​யாளர்​கள் மீது சுமத்​து​வார்​களா அல்​லது

தாங்​களே ஏற்​றுக்​கொள்​வார்​களா என்​பது அவர்​களின்​ முடிவை பொறுத்ததேயாகும் என்ற சூழலும் உள்ளது ,ஆனால் இது அனைத்து தரப்பு மக்களிடத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது

அரசு தரப்பில் தெரிவித்துள்ளது என்ன

இந்த அறிவிப்பு குறித்து மத்திய அரசின் புள்​ளி​விவரங்​களின்​படி, மொத்த யுபிஐ பரிவர்த்தனைகளின் எண்​ணிக்​கை​யில் ரூ.2,000-க்கு மேற்​பட்ட பரிவர்த்​தனை​களின் பங்கு 5% மட்​டுமே என்றும் ஆனாலும், இவை மொத்த பரிவர்த்​தனை மதிப்​பில் 65% பங்​கைக் கொண்டிருப்பதாகவும் அரசு தரப்பு தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது

=============================