US Israel Iran War continues: 20 crore eggs are stuck in Namakkal, exporters are greatly affected due to War google
தமிழ்நாடு

7வது நாளாக தொடரும் போர் : நாமக்கல்லில் 20 கோடி முட்டைகள் தேக்கம், ஏற்றுமதியாளர்கள் பெரும் பாதிப்பு

Namakkal Egg Trade Issue : நாமக்கல்லில் இருந்து நாள்தோறும் சுமார் 70 லட்சம் முட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் நிலையில் போர் பதற்ற சூழலால் ஏற்றுமதியானது கடுமையாக பாதிக்கப்ட்டுள்ளது.

Rohini

20 கோடி வரை இழப்பு

Namakkal Egg Trade Issue : ஏற்கனவே 77 கண்டெய்னர்களில் கப்பல் வாயிலாக அனுப்பப்பட்ட 3.50 கோடி முட்டைகள் நடுக்கடலில் நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில் நாமக்கல்லில் உள்ள கிடங்குகளில் கிட்டத்தட்ட 20 கோடி முட்டைகள் தேக்கத்தால் ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது

வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முட்டைகள்

நாமக்கல்லில் நாள்தோறும் சுமார் 7 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்டுகின்றன , மேலும் தினமும் வெளிநாடுகளுக்கு 70 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன

இந்திய முதல் உலகளவில் ஏற்றுமதி செய்யப்படும் முட்டை

நாமக்கல்லில் இருந்து 1,000க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் ஆறு கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன . நாள்தோறும் 7 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு . தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பப்படுவதுடன், துபாய், குவைத், கத்தார், ஓமான், பஹ்ரேன், ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

தற்போது மத்திய கிழக்கில் நடைபெறும் போர் பதற்றமான நிலையால் அவ்வட்டாரத்திற்கான முட்டை ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நிறுத்தப்பட்ட கப்பல் போக்குவரத்து

தொடர் போர் எதிரொலியால் ஈரானின் ஜெபல் அலி துறைமுகத்தில் வணிகம் நிறுத்தி முற்றிலுமாக வைக்கப்பட்டுள்ளதால் அங்கு கப்பல் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

விமானம் மூலம் முட்டைகளை அனுப்ப 2,000 டாலராக இருந்த கட்டணம் 6,000 டாலர் வரை உயர்த்தப்பட்டுள்ளது.இது ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது .