https://x.com/vaigaichelvan
தமிழ்நாடு

வைகைச் செல்வன் மீதான தேர்தல் வழக்கு : தள்ளுபடி செய்து உத்தரவு

அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் மீதான தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

Kannan

2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது, அருப்புக்கோட்டை பகுதியில் முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் பிரச்சாரம் மேற்கொண்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

திருவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இதன்மீது விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் முறையாக சாட்சிகளிடம் விசாரணை நடத்தவில்லை. மிகக் காலதாமதமாக இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இதை விசாரித்த நீதிமன்றம் இருதரப்பு வாதங்களையும் ஆய்வு செய்து, வைகைச் செல்வன் மீது பதியப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது.

====