Vaishali wins the trophy, her younger brother also wins in Norway chess, two from the same family achieve a record, google
தமிழ்நாடு

கோப்பையை கைப்பற்றிய வைசாலி : நார்வே செஸ்-ல் தம்பியும் அபார வெற்றி, ஒரே குடும்பத்தில் இருவர் சாதனை...!

செஸ் போட்டிகளில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அக்கா தம்பி என இருவரும் வெவ்வேறான ஆட்டங்களில் முதலிடத்தை பிடித்து அசைத்து உள்ளனர்

Rohini

அக்கா தம்பி இருவரும் சாதனை

ஒரே குடும்பத்தை சேர்ந்த அக்கா தம்பி என இருவரும் வெவ்வேறான பிரிவில் செஸ் விளையாட்டில் முதல் இடங்களைபிடித்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர்

மகளிர் செஸ் பிரிவில் முதலிடத்தை பிடித்த வைசாலி

டோக்கியாவில் நடைப்பெற்ற மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் வைஷாலி முதலிடத்தை பெற்று அசத்தியுள்ளார் .ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற டபிள்யூஆர் மகளிர் செஸ் சாம்பியன் ஷிப் தொடரில் அடுத்தடுத்த புள்ளிகளுடன் வைஷாலி இறுதிப்போட்டிக்கு தகுதி முன்னேறினார் வைசாலி .தொடர்ந்து அலெக்சாண்ட்ரா கோஸ்டினுகை வென்று கஜகஸ்தானின் அலுவா நார்மனை எதிர்கொண்டார்.

வெற்றியை கைப்பற்றிய வைசாலி

இந்த போட்டியில் துவக்கத்திலிருந்தே சிறப்பான நகர்த்தல்களை வெளிப்படுத்தி ஆட்டத்தை கையாண்ட வைஷாலி 2 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

சான்பியன் பட்டத்தை தட்டிச்சென்ற இவரது சகோதரர்

உலகளவில் அனைசமீபத்தில் நார்வேயில் நடந்த செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இவரது சகோதரரான பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்திருக்கிறார் ,

முதல்வர் விஜய் வாழ்த்து

இந்த நிலையில் இவர்கள் இருவருடைய சாதனையும் அனைவரிடையும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது , மேலும் இந்தியாவிற்கு கிடைத்த பெருமை என அனைவர் இடத்திலும் வரவேறப்பை பெற்றுள்ளது

முதல்வர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது

“நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 (Norway Chess 2026) தொடரில் அறிவார்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்திட்ட கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

ஒரே தொடரில் நடப்புச் சாம்பியன் மாக்னஸ் கார்ல்செனை இரண்டு முறையும், நான்கு போட்டிகளில் தொடர்ந்து வெற்றியும் பெற்று சாதனை படைத்துள்ளார். தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா புதிய சாதனைகளைப் படைத்திட எனது வாழ்த்துகள்

காசோலை வழங்கி , செஸ் விளையாடி வாழ்த்து

தமிழ்நாரு முத்லவர் விஜய் அவர்கள் ,உயரிய ஊக்கத் தொகையாக 50 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி, கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா அவர்களுடன் செஸ் விளையாடினார். இது குறித்து தனது எக்ஸ் பக்கதில் தெரிவித்துள்ளதாவது

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (8.6.2026) தலைமைச் செயலகத்தில், நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 தொடரில் முதல் இந்தியராகப் பட்டத்தை வென்று, வரலாற்றுச் சாதனை படைத்த கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தாவிற்கு உயரிய ஊக்கத் தொகையாக 50 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி, கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா அவர்களுடன் செஸ் விளையாடினார்கள்.