அதரவு வழங்கிய விசிக
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் பெரும்பான்மையான வாக்குகளை பெற்று ஆட்சி அமைக்க விசிக உள்ளீட்ட கட்சிகளிடம் ஆதரவு கோரியிருந்தது, இந்த நிலையில் விசிக , கம்யுனிஸ்ட் , ஐயுஎம்எல் கட்சிகள் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியிருந்தன .
பெரும்பான்மை பெற்று ஆட்சியை கைப்பற்றிய தவெக
ஆட்சி அமைக்க தேவையான் 120 இடங்களை கைப்பற்றி தமிழக வெற்றி கழகம் ஆட்சியை கைப்பற்றியது .
அமைச்சர்கள் பதவியேற்பு
தவெகவில் வெற்றி பெற்ற அனைத்து அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்ட நிலையில் , கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தை கட்சிகளும் , ஐயுஎம்எல் கட்சியின் அமைச்சர்களும் பதவியேற்று் கொண்டனர்
அதிகாரத்தில் பங்கு
விசிகவின் அதிகாரத்தில் பங்கு என்ற நீண்ட நாள் கனவானது தற்போது பலித்துள்ளது. விசிகாவின் திண்டிவனம் தொகுதியில் களம் கண்ட வன்னி அரசு, அமைச்சராக பதவியேற்றுள்ளார்
சமூக நீதித்துறை ஒதுக்கீடு
அமைச்சராக பதவியேற்றுக்கொண்ட வன்னி அரசக்கு சமூக நீதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
திருமாவின் படைத்தளபதி
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) துணைப் பொதுச்செயலாளராகவும், தற்போது தமிழக அமைச்சராகவும் உயர்ந்திருக்கும் இவர், விசிக தலைவர் தொல். திருமாவளவனின் மிக நம்பிக்கையான, போர்க்குணம் மிக்க படைத்தளபதியாக அறியப்படுகிறார் வன்னி அரசு
இது குறித்து வன்னி அரசு கூறியது
தமிழ்நாட்டில் விடுதலைச் சிறுத்தைகள்தான் மய்யம் என்பதை மீண்டும் எங்கள் தலைவர் திருமாவளவன் நிரூபித்துள்ளார் என மார்த்தட்டும் வன்னியரசு, விசிக-வின் முதல் அமைச்சராக, அதிகார விளிம்பில் இருக்கும் மக்களின் உரிமைகளுக்காகவும், சமூக நீதிப் பயணத்திற்காகவும் தமிழக அமைச்சரவையில் தன் முத்திரையைப் பதிப்பேன் என கூறியுள்ளார்.
================