Various political parties have welcomed and criticized the Union Budget Google
தமிழ்நாடு

Union Budget 2026-27 : அரசியல் கட்சிகளின் வரவேற்பு, விமர்சனங்கள்

Budget 2026-27 மத்திய பட்ஜெட்டுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் வரவேற்பையும், விமர்சனங்களையும் முன்வைத்துள்ளன.

Kannan

மத்திய பட்ஜெட் 2026 -27

Various political parties have welcomed and criticized the Union Budget 2026-27 : நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக, ஞாயிற்றுக்கிழமை, மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில், பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்று இருந்தன.

இளைஞர்கள், பெண்கள், ஏஐ தொழில்நுட்பத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டு இருந்தது. பட்ஜெட் குறித்து பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் முன்வைத்த கருத்துக்களை பார்க்கலாம்...

மத்திய அமைச்சர் எல். முருகன்

* ஆதிச்​சநல்​லூரில் கலாச்​சார மையம், பொதிகை மலை​யேற்ற சுற்​றுலா திட்​டம் தமிழகத்​துக்கு ஏராள​மான திட்​டங்​கள் அறிவிப்பு

* வளர்ச்சி அடைந்த பாரதம் 2047 என்ற லட்​சி​யத்தை அடைவதற்​கான உறு​தி​யான பாதை வகுப்பு

தமிழக நிதி அமைச்​சர் தங்​கம் தென்​னரசு

* மத்​திய பட்​ஜெட் தமிழக மக்​களுக்கு பெரும் ஏமாற்​றம்

* மாநிலத்​தின் அடிப்​படை வளர்ச்​சிக்​கான தேவை​கள், வேலை​வாய்ப்​பு, கல்​வி, சுகா​தா​ரம், தொழில்​துறை முதலீடு போன்றவற்றில் தெளி​வான அறி​விப்​பு​கள் இல்​லை

* நாட்​டின் வளர்ச்​சிக்கு முக்​கியப் பங்​காற்​றும் தமிழகத்​துக்கு உரிய பங்​கீடு இல்லை

* தமிழ் மக்​களின் எதிர்​பார்ப்​பு​களை முற்​றி​லும் புறக்​கணித்த பட்​ஜெட்​ இது.

தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்

* சென்னை- ஹைத​ரா​பாத்- பெங்​களூரு நகரங்​களை இணைத்து அதிவேக ரயில் வழித்​தடச் சேவைக்கு வரவேற்பு

பாமக தலை​வர் அன்​புமணி

* தமிழகத்​துக்கு ஏராள​மான திட்​டங்​கள் அறிவிக்​கப்​பட்​டிருப்​பது மகிழ்ச்சி

* வரி வரு​வா​யில் 41% மட்​டுமே மாநிலங்​களுக்கு பகிர்ந்து வழங்​கப்​படும் என்ற அறி​விப்பு ஏமாற்​றம்

தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன்

* அரிய வகை கனிமங்​கள் எடுக்க வழித்​தடம், அதிவேக ரயில் வழித்​தடம், பொதிகை மலை​யேற்ற சுற்​றுலா வழித்​தடம் ஆகியவை தமிழக பொருளா​தார வளர்ச்​சிக்கு உதவும்

டிடிவி தினகரன்

* 9வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதாராமனுக்கு மனமார்ந்த பாராட்​டு

* வளர்ச்​சி​யடைந்த பாரதம் எனும் இந்​தி​யா​வின் இலக்கை எளி​தாக எட்​டிப் பிடிக்கும் அம்சங்கள்

தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை

* ஆதிச்​சநல்​லூர் உட்பட நாட்​டின் 15 தொல்​லியல் இடங்​களை கலாச்​சார மையங்​களாக மேம்பாடு

* இந்​தி​யா​வின் செழிப்​பான நாகரி​கத்தை உலகுக்கே நாம் பறை​சாற்ற முடி​யும்.

திமுக எம்.பி கனி​மொழி

* தமிழகத்தின் அடிப்​படை வளங்​களை சுரண்​டும் பட்​ஜெட்

* தமிழக மக்​களுக்கு மிகப்​பெரிய அநீதி

* தமிழகத்​துக்​கான திட்​டங்​களும் இல்​லை, திருக்​குறளும் இல்​லை.

* தமிழகம், கேரளம், மேற்கு வங்​கம் ஆகிய மாநிலங்​கள் புறக்​கணிப்பு

இவ்வாறு அரசியல் கட்சிகள் தங்கள் கருத்துக்களையும், விமர்சனங்களையும் முன்வைத்துள்ளன.

=====