VB-G RAM-G Schemes additional burden state finances; TVK should take stand against them Thangam Thennarasu.  google
தமிழ்நாடு

VB-G RAM-G திட்டம்: 40%மாநில நிதி, கூடுதல் சுமையே, தவெக எதிர்நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் ,தங்கம் தென்னரசு

அமல்படுத்தப்பட்டுள்ள VB-G RAM-G திட்டத்தின் மூலம், மாநில அரசுகள் மீது கூடுதல் நிதிப் பொறுப்புகள் சுமத்தப்பட்டுள்ளதாக் முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருக்கிறார்

Rohini

VB-G RAM-G திட்டம் நாடு முழுவதும் அமல்

நாடு முழுவதும் VB-G RAM-G திட்டமானது அமலுக்கு வந்துள்ளது.டு முழுவதும் கிராமப்புற வேலைவாய்ப்பை உறுதி செய்யும் நோக்கத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டமானது 100 ஆக இருந்து வந்தது

பெயர் மாற்றம் மற்றும் 125 ஆக வேலை நாள் உயர்வு

காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டத்தில் சில மாற்றங்களை மத்திய அரசு மாற்றியமைத்து அதன்படி, 100 நாள் வேலை உறுதி என்பது 125 நாட்களாக உயர்த்தப்பட்டது அத்திட்டமானது நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது

VB-G RAM-G . திட்டம் மாநிலங்களுக்கு கூடுதல் நிதிசுமையே

பெயர் மாற்றம் செய்யப்பட்டு புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள இந்த திட்டத்தில் மத்திய அரசின் நிதி பங்களிப்பானது 60% மாகவும் .மாநில அரசின் பங்களிப்பானது 40% மாக என்று மாற்றம் திருத்தப்பட்டு புதிய திருத்த மாசோதா தற்போது நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது

இது குறித்து முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் (MGNREGA) செயல்படுத்தப்பட்டபோது, மாநிலங்களின் நிதிச் சுமை கட்டுக்குள் இருந்தது. ஆனால் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள VB-G RAM-G திட்டத்தின் மூலம், மாநில அரசுகள் மீது கூடுதல் நிதிப் பொறுப்புகள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்த திட்டம் ந்தி மேலாண்மையின் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தும்

கூட்டாட்சியின் அடிப்படை நோக்கமான ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் பொறுப்புகளை நியாயமான முறையில் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற கொள்கைக்கு மாறாக, மாநிலங்களின் நிதிப் பங்களிப்பை அதிகரித்திருப்பது மாநிலங்களின் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நிதி மேலாண்மையின் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும்.

இத்திட்டத்திற்கு தவெக அரசு எதிர்நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்

இது மாநிலங்களின் நிதிச் சுயாட்சியை மேலும் பலவீனப்படுத்தும். மாநிலங்களின் நிதிச் சுமையைக் கணிசமாக அதிகரிக்கும் இந்தத் திட்டத்தை எந்தவித எதிர்ப்புமின்றி செயல்படுத்த முனைந்தால் தமிழ்நாட்டின் நிதி நலன்களையும்

மாநில உரிமைகளையும் பாதுகாக்கத் தவறியதாகவே அமையும். எனவே, மாநிலத்தின் நலன்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய அம்சங்கள் குறித்து ஒன்றிய அரசிடம் வலுவான எதிர் நிலைப்பாட்டை தவெக அரசு எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்

=========================