VCK MP Thirumavalavan on TVK Vijay Election Campaign Permission in Tamil 
தமிழ்நாடு

விஜய்க்கு அனுமதி மறுப்பா? : கருத்து சுதந்திரம் பொதுவானது - திருமா

Thirumavalavan on TVK Vijay Campaign : தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு என்பது ஏற்புடையது அல்ல, அனைவருக்கும் கருத்து சுதந்திரம் இருக்கிறது என, திருமாவளவன் தெரிவித்து உள்ளார்.

Kannan

Thirumavalavan on TVK Vijay Campaign : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வரும் 13ம் தேதி திருச்சியில் தனது பிரசாரத்தை தொடங்க இருக்கிறார். அவர் பேசுவதற்காக தேர்ந்து எடுக்கப்பட்ட இடங்களில் அனுமதி வழங்க மறுத்த காவல்துறை, பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது.

செங்கோட்டையன் செயல் வியப்பளிக்கிறது :

இந்தநிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன்(VCK Leader Thirumavalavan Press Meet), “ செங்கோட்டையன் இயல்பாக கட்சியின் ஒருங்கிணைப்புக்கு போராடுகிறார் என்றால், அதனை வாழ்த்த கடமைப்பட்டிருக்கிறோம். ஆனால், அவரை (செங்கோட்டையன்) பாஜக இயக்குகிறது என்றால், அது அதிமுகவுக்கு நல்லது கிடையாது. அமித் ஷாவை சந்தித்த செங்கோட்டையன் பாஜகவின் பின்னணியை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

அதிமுக தொண்டர்கள் உணர்ந்திருப்பார்கள் :

எடப்பாடி பழனிசாமி உள்பட பலருக்கும் என் மீது ஆத்திரம், எரிச்சல் வந்தது. அதிமுகவை தனியே போக விடாமல், கூட்டணியில் இணைத்தாலும், தனித்து செயல்பட விடாமல் முயற்சி நடப்பதை இப்போது, அதிமுக தொண்டர்கள் உணரத் தொடங்கியிருப்பார்கள்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஒருவரை பாஜக தலைவர்கள் சந்திப்பது, சரியான கூட்டணி தர்மம் கிடையாது. இதையும் அதிமுக தொண்டர்கள் உணர்ந்து இருப்பார்கள் எனக் கருதுகிறேன்.

விஜய் பிரசாரத்திற்கு அனுமதி தேவை :

விஜய் பிரசாரத்திற்கு(Vijay Campaign) காவல்துறை அனுமதி மறுத்திருந்தால் அது ஏற்புடையதல்ல. ஜனநாயகத்தில் அனைவருக்கும் கருத்துச் சுதந்திரம் உண்டு. எனவே, அவருக்கு உரிய அனுமதி வழங்க வேண்டும்” இவ்வாறு திருமாவளவன் கருத்து தெரிவித்தார்.

===================