அதிமுக - 47 இடங்களில் வெற்றி
சட்டமன்ற தேர்தலில் 47 இடங்களை மட்டுமே கைப்பற்றிய அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. தவெக ஆட்சிக்கு வராமல் தடுக்க திமுகவும் அதிமுகவும் கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
வேலுமணி தரப்பு
தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம் என்று குற்றம்சாட்டிய வேலுமணி, சி.வி. சண்முகம் தரப்பு, முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்தது.
தகுதி நீக்கம் - என்ன நடக்கும்
எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேர் எதிர்த்து வாக்களித்தனர். இதனால் அதிமுக 2 ஆக பிரிந்து கிடப்பது தெரிய வந்தது.
அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 25 பேரை தகுதி நீக்கம் செய்ய எடப்பாடி பழனிசாமி தரப்பு சபாநாயகரை அணுகியது. வேலுமணி தரப்பும் தங்கள் வாதத்தை முன்வைக்க சபாநாயகர் கையில் இறுதி முடிவு உள்ளது.
தவெக அரசின் அதிமுக?
அவசியம் ஏற்பட்டால் நீதிமன்றத்தை நாடவும் எடப்பாடி தரப்பு திட்டமிட்டு இருந்தது. இதனிடையே வேலுமணி தரப்பு அமைச்சரவையில் இடம்பெறும் என்ற செய்திகளும் வெளியாகின.
ஆட்சியில் இடமில்லை
இடதுசாரிகளும், விடுதலை சிறுத்தைகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது. தமிழக அமைச்சரவை 2 முறை விரிவாக்கம் செய்யப்பட்டு, பலம் 35 ஆக உயர்ந்துள்ளது.
எனவே, இனி அதிமுகவுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகி விட்டது.
எஸ்பி வேலுமணி விளக்கம்
அப்படி என்றால் வேலுமணி தரப்பு இனி என்ன செய்ய போகிறது என்ற கேள்வி எழுந்தது. இந்தநிலையில், யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக எஸ்பி வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார்.
எடப்பாடி தான் பொதுச்செயலாளர்
“எங்களுக்கு எடப்பாடி பழனிசாமிதான் பொதுச்செயலாளர், கட்சியை பலப்படுத்த வேண்டும் என்றே கோரினோம். அதிமுகவில் பிளவு இல்லை; கருத்து வேறுபாடுதான் உள்ளது.
தவெகவை ஆதரிக்க காரணம்!
தவெக அமைச்சர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். அமைச்சர் பதவிக்காக நாங்கள் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.
அமைச்சர் பதவி கேட்டதாக எங்கள் தரப்பிலோ, தவெக தரப்பிலோ இதுவரை கூறவில்லை.
மக்கள் தவெகவுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர். திமுக எதிர்ப்பை எப்போதும் முன்வைக்கும் கட்சி அதிமுக. தவெகவும் திமுக எதிர்ப்பை தான் முன்வைத்தது. அதோடு, அதிமுக கொண்டுவந்த திட்டங்கள் தொடர வேண்டும்.
தெளிவாக செயல்பட்டோம்
மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்ற விரிவான ஆரோக்கியமான கோரிக்கைகளுடன்தான் தவெக அரசுக்கு ஆதரவளித்தோம். இதை சட்டமன்றத்திலும் தெளிவுபடுத்தி விட்டோம்.
அதிமுகவை உடைக்க மாட்டோம்
அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது. அதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். இது தொடர்பாக பொதுக்குழுவை நடத்தி விவாதிப்போம். அதிமுகவை உடைக்கும், பிரிக்கும் எண்ணமோ எங்களுக்கு இல்லை.
அம்மாவின் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் அமைய வேண்டும். கட்சி எங்களின் உயிர் மூச்சு. தவறான செய்திகளை பரப்பாதீர்கள்” என்று வேலுமணி கேட்டுக் கொ