Vetrivel Muruganukku Arohara”: PM Modi Shares Thiruparankundram Visit Photos Google
தமிழ்நாடு

திருப்பரங்குன்றத்தில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்த பிரதமர் மோடி!

திருப்பரங்குன்றம் கோயிலுக்கு வருகை தந்தபோது எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, மீண்டும் “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா” என பதிவிட்டுள்ளார்...

NARENDRAN K

திருப்பரங்குன்றம் கோயில் வருகையின் புகைப்படங்கள் :

இந்நிலையில், இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்தபோது எடுத்த புகைப்படங்களைப் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.

இந்தப் புகைப்படங்களுடன், “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா” என்றும் மீண்டும் பதிவிட்டுள்ளார்.

மூன்று மொழிகளில் முருகனுக்கு அரோகரா :

இதற்கு முன்னதாக, நேற்று தனது எக்ஸ் தளத்தில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா” என பிரதமர் மோடி பதிவிட்டிருந்தார்.

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், பிரதமரின் இந்தப் பதிவுகள் கவனம் பெற்றுள்ளன.

இன்று மாலை தீபம் ஏற்ற ஏற்பாடுகள் தீவிரம்:

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, இன்று நவம்பர் 28-ம் தேதி மாலை 5 மணிக்கு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இதற்காக பாதுகாப்புப் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சமூக வலைதளங்களில் கவனம் பெற்ற பிரதமரின் பதிவு:

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள், ஆன்மிக அமைப்புகள் எனப் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி கோயில் வருகையின்போது எடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருப்பது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

குறிப்பாக, முருகப் பெருமானை போற்றும் வகையில் அவர் தொடர்ந்து வெளியிட்டு வரும் பதிவுகள் பக்தர்களிடையே பேசுபொருளாகியுள்ளன.

பிரதமரின் புகைப்பட பதிவு வைரல் :

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தமிழக அரசியல் மற்றும் ஆன்மிக வட்டாரங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வரும் நிலையில், பிரதமர் மோடி பகிர்ந்துள்ள இந்தப் புகைப்படங்கள் கவனம் ஈர்த்துள்ளன.

குறிப்பாக, “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா” என்ற அவரது பதிவு முருக பக்தர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

==========================