Vice President C.P. Radhakrishnan paid homage at Pasumpon on Thevar Guru Pujai Pasumpon Muthuramalinga Thevar Guru Poojai 2025
தமிழ்நாடு

தேவர் ஜெயந்தி, குருபூஜை : பசும்பொன்னில் துணை ஜனாதிபதி CPR மரியாதை

Pasumpon Muthuramalinga Thevar Guru Poojai 2025 : முத்துராமலிங்க தேவர் குருபூஜையையொட்டி, பசும்பொன்னில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் மரியாதை செலுத்தினார்.

Kannan

முத்துராமலிங்க தேவர்

Pasumpon Muthuramalinga Thevar Guru Poojai 2025 : விடுதலை போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 30ம் தேதி நடத்தப்படுகிறது. அவரது நினைவிடம் அமைந்துள்ள ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் ஜெயந்தி மற்றும் குருபூஜை விமரிசையாக நடைபெறும்.

தேவர் ஜெயந்தி, குருபூஜை

அந்த வகையில் இந்த ஆண்டும் புசும்பொன்னில் தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா(Pasumpon Muthuramalinga Thevar Jayanthi 2025) நடைபெற்று வருகிறது. 118வது ஜெயந்தி மற்றும் 63வது குருபூஜை விழா இன்று நடைபெறுகிறது. இதையொட்டி, மதுரையில் இருந்து துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பசும்பொன் சென்றார்.

தேவர் நினைவிடத்தில் மரியாதை

தேவர் நினைவிடத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின் போது தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மூத்த நிர்வாகி ஹெச்.ராஜா ஆகியார் உடனிருந்தனர்.

தேசியம், தெய்வீகம் போற்றுவோம்

பின்னர் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பேட்டி அளிக்கையில், “தனது ஜமீன் சொத்துக்களில் பெரும் பகுதியை பிற சமுதாயத்தினருக்கு வழங்கியவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார். பற்றற்ற பண்பாளர் தேவர் திருமகனார். அவரைப் போற்றுவது தேசியத்தையும், தெய்வீகத்தையும் போற்றுவதாகும்.

நேதாஜியின் தளபதியாக திகழ்ந்தவர் வீரத்திருமகனார் முத்துராமலிங்க தேவர். சத்தியம், வாய்மையை கடைபிடித்தவர்,' என்று சி.பி. ராதாகிருஷ்ணன் புகழாரம் சூட்டினார்.

மேலும் படிக்க : நாடு உயர்ந்தால் நாம் வளர முடியும்- சி.பி. ராதாகிருஷ்ணன்!

பசும்பொன்னில் தமிழக தலைவர்கள்

முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு கட்சி தலைவர்கள் தேவர் குருபூஜையில் கலந்து கொண்டு மரியாதை செலுத்துகின்றனர். தேவர் ஜெயந்தியையொட்டி பசும்பொன்னில் சுமார் 8000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

=================